`பொறுமை இழந்தேன், சாண்ட்விச்சை திருடிவிட்டேன்!'- எம்பி பதவியை இழந்தவரின் அடடே விளக்கம் | Slovenia MP quits after stealing sandwich

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (16/02/2019)

கடைசி தொடர்பு:11:20 (16/02/2019)

`பொறுமை இழந்தேன், சாண்ட்விச்சை திருடிவிட்டேன்!'- எம்பி பதவியை இழந்தவரின் அடடே விளக்கம்

சுலோவேனியா நாட்டில் சாண்ட்விச் திருடிய எம்பி, பதவியை இழந்துள்ளார். 

சாண்ட்விட்ச் திருடிய எம்பி

கிழக்கு ஐரோப்பிய நாடான சுலோவேனியாவின் எம்பி-யாக இருப்பவர், தர்ஜ் கிரஜ்சிச். இவர், சமீபத்தில் ஒரு வித்தியாசமான சர்ச்சையில் சிக்கினார். சுலோவேனியா நாட்டின் தலைநகர் லியூப்லியானாவில் உள்ள ஒரு மாலுக்கு சமீபத்தில் சென்றவர், அங்குள்ள உணவகத்தில் 'சாண்ட்விச்'சை திருடிச் சாப்பிட்டார் என்பதே அந்த சர்ச்சை. அவர், சாண்ட்விச் திருடியதை அங்கிருந்தவர்கள் கண்டுபிடிக்க, விவகாரம் பெரிதானது. டி.வி விவாதங்களைத் தாண்டி, விவகாரம் அந்நாட்டு நாடாளுமன்றம் வரை சென்றது. 

எதிர்க்கட்சிகளும் மக்களும் இவரைக் கடுமையாக விமர்சிக்க, கடைசியில்... நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்டு, தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார் கிரஜ்சிச். கடந்த செப்டம்பர் மாதம்தான் இவர் எம்பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்ற ஒரு சில மாதங்களிலேயே அவர் இப்படியான ஒரு சர்ச்சையில் சிக்கி பதவியை இழந்துள்ளார். இதற்கிடையே, டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கிரஜ்சிச், `சாண்ட்விட்ச்' திருடியது குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

தர்ஜ் கிரஜ்சிச்

``சாண்ட்விச் வாங்குவதற்காக நான் கவுண்டரில் நின்றுகொண்டிருந்தேன். மூன்று நான்கு நிமிடங்களுக்கு மேலாக காத்துக்கொண்டிருந்தேன். ஆனால், என்னை யாருமே கண்டுகொள்ளவில்லை. அதனால் பொறுமை இழந்து, சாண்ட்விச்சை எடுத்துவிட்டேன். கடையின் பாதுகாப்புகுறித்து பரிசோதிக்கவே இப்படிச் செய்தேன். பிறகு, சாண்ட்விச்சுக்கு உரிய பணத்தைக் கொடுத்துவிட்டேன்" என்று கூறியுள்ளார். இவர் திருடியபோது, கடையில் மூன்று ஊழியர்கள் இருந்தும்  இவர் செய்ததை யாரும் கண்டுபிடிக்கவில்லை. அங்கிருந்த வயதான முன்னாள் பேராசிரியர் ஒருவர்தான், இவரின் செய்கையைக் கண்டுபிடித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close