`விரைவில் பாகிஸ்தான் தவிர்க்கமுடியாத நாடாக வளரும்!’ - சவுதி இளவரசர் | Saudi Crown Prince Mohammad Bin Salman Visiting pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (18/02/2019)

கடைசி தொடர்பு:13:25 (18/02/2019)

`விரைவில் பாகிஸ்தான் தவிர்க்கமுடியாத நாடாக வளரும்!’ - சவுதி இளவரசர்

சவுதி இளவரசர் முகமது பின்சல்மான் இரண்டு நாள் பயணமாக ஆசியா வந்துள்ளார். நேற்று பாகிஸ்தான் சென்ற அவர் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானை சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே 20 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் சில ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

சவுதி - பாகிஸ்தான்

நேற்று இரவு விருந்துக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முகமது பின் சல்மான், `` இம்ரான்கான் போல் ஒரு பிரதமருக்காகத்தான் பாகிஸ்தான் மக்கள் இத்தனை காலம் காத்திருந்தனர். இனி பொருளாதாரம் உட்பட அனைத்து விஷயங்களிலும் பாகிஸ்தான் வளர்ச்சியடையும். சவுதியின் அன்புநாடு பாகிஸ்தான். சில கடுமையான நேரங்களில் நம் இரு நாடுகளும் ஒற்றுமையாக இருந்துள்ளோம். வரும் காலங்களில் பாகிஸ்தான் மிகவும் தவிர்க்கமுடியாத நாடாக வளர்ச்சியடையும் என எனக்கு நம்பிக்கையுள்ளது. அந்த வளர்ச்சியில் நாங்களும் பங்குபெறுவோம் என உறுதியாகத் தெரிவிக்கிறேன். நான் இளவரசராக பதவியேற்ற பிறகு என்னுடைய முதல் வெளிநாட்டுப் பயணம் இது. அதுமட்டுமில்லாமல் தற்போதுதான் நான் பாகிஸ்தானுக்கு முதல்முறையாக வந்துள்ளேன்’ எனத் தெரிவித்தார். பின்னர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சவுதி இளவரசரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். 

சவுதி இளவரசரின் பாகிஸ்தான் வருகையை முன்னிட்டு அந்நாட்டில் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி ஆகிய மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்து வரும் இந்த நிலையில். சவுதி இளவரசரின் பாகிஸ்தான் பயணம் அதிக கவனம் பெற்றுள்ளது.


[X] Close

[X] Close