'புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானுக்கு எந்த ஆதாயமும் இல்லை' - இம்ரான் கான் | Pakistan PM Imran Khan's statement on Pulwama terrorist attack

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (19/02/2019)

கடைசி தொடர்பு:16:30 (19/02/2019)

'புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானுக்கு எந்த ஆதாயமும் இல்லை' - இம்ரான் கான்

'மிக எளிதில் போரைத் தொடங்கிவிடலாம். ஆனால் அதை முடிவுக்குக் கொண்டுவருவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை' என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார்.

இம்ரான் கான்

புல்வாமா தாக்குதல்குறித்த இந்தியாவின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். ஆனால், ஆதாரம் இல்லாமல் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டுகிறது' என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் வானொலியில் பேசியுள்ளார். மேலும், “ எங்கள் மண்ணில் யாரும் பயங்கரவாதத்தைப் பரப்புவதை நாங்கள் விரும்பவில்லை. பாகிஸ்தானில் இருந்து எவரேனும் ஆதாரங்களைக் கண்டுபிடித்தால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்'' என்று இந்திய அரசாங்கத்திடம் நான் கூற விரும்புகிறேன். இந்தியாவில் இது தேர்தல் நேரம் என எனக்குத் தெரியும். இந்தியா நம்மைத் தாக்கும் என்றால், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். மிக எளிதில் போரைத் தொடங்கிவிடலாம். ஆனால், அதை முடிவுக்குக் கொண்டுவருவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பேச்சுவார்த்தை மூலமே இந்த விவகாரங்களுக்குத் தீர்வு காண வேண்டும்.

பாகிஸ்தான் பிரதமர்

இந்தியா எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம் சாட்டுகிறது. இந்தத் தாக்குதல்மூலம் பாகிஸ்தானுக்கு எந்த ஆதாயமும் இல்லை. இது புதிய பாகிஸ்தான். இங்கு, புதிய சிந்தனை எழத்தொடங்கியுள்ளது. அது, தீவிரவாதத்துக்கு ஒருபோதும் துணை நிற்காது” என்று பேசியுள்ளார்.
 


[X] Close

[X] Close