இஸ்ரேல் காட்டிய `கடவுளின் வெஞ்சினம்'- மூனிச் சம்பவத்துக்காக பயங்கரவாதிகளை துடைத்தெறிந்த கதை! | how isrel revenge for munich massacre

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (20/02/2019)

கடைசி தொடர்பு:14:01 (20/02/2019)

இஸ்ரேல் காட்டிய `கடவுளின் வெஞ்சினம்'- மூனிச் சம்பவத்துக்காக பயங்கரவாதிகளை துடைத்தெறிந்த கதை!

மேற்கு ஜெர்மனியின் மூனிச் நகரில் 1972-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக நடந்துகொண்டிருந்தது. 1936-ம் ஆண்டு ஜெர்மனி பிரிந்த பிறகு முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு மேற்கு ஜெர்மனிக்கு வழங்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 4-ம் தேதி அந்த சம்பவம் நிகழ்ந்தது. மூனிச் நகரில் ஒலிம்பிக் கிராமத்துக்குள் நுழைந்த 8 பாலஸ்தீன தீவிரவாதிகள் 11 இஸ்ரேலிய வீரர்களைக் கடத்திச் சென்றனர். உலகம் அதிர்ந்து போனது. இஸ்ரேல் எங்கள் வீரர்களுக்கு ஏதாவது நடந்தால் பாலஸ்தீனத்தை அழித்து விடுவோம் என்றது. 

இஸ்ரேல் நடத்திய கடவுளின் வெஞ்சினம்

விளையாட்டு வீரர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்து கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பது பயங்கரவாதிகளின் திட்டம். மூனிச் நகரில் இருந்த கெய்ரோவுக்குச் செல்லத் தனி விமானம் ஏற்பாடு செய்யச் சொன்னான் தீவிரவாதிகளின் தலைவன் இஸ்ஸா. மூனிச் விமான நிலையத்தில் தனி விமானமும் நிறுத்தப்பட்டிருந்தது. விமான நிலையத்தில் அதிரடியாகத் தாக்குதல் நடத்தி விளையாட்டு வீரர்களை மீட்டு விடலாம் என்று ஜெர்மனி கணக்குப் போட்டது. திட்டம் ஃபெயிலியராக பாலஸ்தீன தீவிரவாதிகள் 9 இஸ்ரேலிய வீரர்களை சுட்டுக் கொன்றனர். விளையாட்டு வரலாற்றில் மறக்க முடியாத சம்பவம் இது. உலக வரலாற்றில் 'கறுப்பு செப்டம்பர்' என்று இந்தச் சம்பவம் குறிப்பிடப்படுகிறது. 

 

இஸ்ரேல் நடத்திய கடவுளின் வெஞ்சினம்

இஸ்ரேல் பிரதமராக கோல்டா மேயர் இருந்தார். இந்தியா இப்போது செல்கிறதே... 'மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம்' என்ற வார்த்தையைத்தான் அப்போது இஸ்ரேல் சொன்னது. தங்களில் ஒருவரைக் கொன்றால் 9 பேரைக் கொல்வது இஸ்ரேலின் வழக்கம். மூனிச் நகரில் தங்கள் விளையாட்டு வீரர்களைக் கொன்றவர்களின் பின்னணியில் இருந்தவர்களைப் பழிவாங்கும் பொறுப்பு இஸ்ரேலின் உளவுத்துறையான மொஸாத் வசம் ஒப்படைக்கப்பட்டது. மொஸாத் தன் பழிவாங்கும் படலத்துக்கு `கடவுளின் வெஞ்சினம் ' என்று மொஸாத் பெயர் சூட்டிக் கொண்டது. உங்கள் பக்கத்தில்கூட ஒரு மொஸாத் உளவாளி இருக்கலாம் என்ற சொலவடை உண்டு. உலகின் சர்வ வல்லமை வாய்ந்த உளவுப்படை இது. 

இஸ்ரேல் நடத்திய கடவுளின் வெஞ்சினம்

ஒலிம்பிக் போட்டி முடிவதற்குள் தன் பழிவாங்கும் படலத்தை தொடங்கியது மொஸாத். அக்டோபர் மாதம் 16-ம் தேதி ரோம் நகரில் முதல் ஆளாக வாய்ல் ஸ்வாய்ட்டர் என்பவனை சுட்டுக் கொன்றது. அடுத்து, பிரான்சில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தைச்  சேர்ந்த மொகமது ஹம்சாரியை வேட்டையாடியது. பிரான்சில் மொஸாத் நடத்திய முதல் தாக்குதல் இது. அடுத்த தாக்குதல் சைப்ரஸ் நாட்டில். மூனிச் சம்பவத்துக்கு மூளையாகச் செயல்பட்டது ஜோர்டானைச் சேர்ந்த ஹூசைன் அல் பஷீர் என்று இஸ்ரேல் சந்தேகித்தது. நிக்கோசியா நகரில் ஒரு ஹோட்டலில் இவன் தங்கியிருந்தான். அறையில் படுக்கைக்கு கீழே வெடிகுண்டை வைத்து உடலைச் சிதறடித்தது மொஸாத்.

இஸ்ரேல் நாட்டின் மொசாத்

1973-ம் ஆண்டு பெய்ரூட் நகரில்  அமெரிக்க பல்கலையில் பேராசிரியராகப் பணிபுரிந்த பாசில் அல் குவாசி என்பவரை மொசாத் உளவாளிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அல் குவாசியின் உடலில் 12 குண்டுகள் பாய்ந்திருந்தது. இப்படியாக 1988-ம் ஆண்டு வரை தங்கள் நாட்டு  விளையாட்டு வீரர்களைக் கொன்றவர்களை இஸ்ரேல் முற்றிலும் அழித்து விட்டே ஓய்ந்தது. மியூனிச் சம்பவத்துக்காக  கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக மொசாத் கடவுளின் வெஞ்சினத்தை நடத்திக் கொண்டிருந்தது. பிரபல ஹாலிவுட் இயக்குநர்  ஸ்டீபன் ஸ்பீல்பர்க் மொஸாத் பயங்கரவாதிகளை வேட்டையாடியதை மையமாகக் கொண்டு  `மியூனிச்' என்ற பெயரில் படமும் இயக்கினார். 

புல்மாவா தாக்குதலையடுத்து இஸ்ரேல் நாடு இந்தியாவுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளது. 'தயவுசெய்து தீவிரவாதிகளிடம் எங்கள் பாணியை பின்பற்றுங்கள்' என்பதுதான் அந்த வேண்டுகோள். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close