வங்கதேச அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 69-க்கும் அதிகமானோர் பலி! | Fire In Apartments Used As Chemical Warehouses In Bangladesh

வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (21/02/2019)

கடைசி தொடர்பு:09:00 (21/02/2019)

வங்கதேச அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 69-க்கும் அதிகமானோர் பலி!

வங்கதேச தலைநகரான தாக்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 69-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்து


வங்கதேசத் தலைநகர் தாக்காவில் சவுக்பசார் என்ற அடுக்குமாடி குடியிருப்பு பகுதியுள்ளது. இந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் ஒருபகுதி, ரசாயனப் பொருள்கள் வைக்கும் இடமாகவும் செயல்பட்டு வருகிறது. இந்த ரசாயனப் பொருள்களால் ஏற்பட்ட தீ, அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பில் தீ மள மள வென பரவியதால், பலரால் குடியிருப்பை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தீ

இந்த விபத்தில் 69 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்து, கட்டடத்துக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மக்களை மீட்டு வருகின்றனர்.

தீ அணைப்பு

சிலிண்டரிலிருந்து பரவிய கேஸ், அடுக்குமாடிக் குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த ராசாயனப் பொருள்களில் படவே தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீ விபத்தில் கட்டடத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள், 10 சைக்கிள் ரிக்ஷாக்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


[X] Close

[X] Close