சவுதி இளவரசருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த பாகிஸ்தான்! | Saudi Arabia’s Crown Prince gifted gold-plated gun by Pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (21/02/2019)

கடைசி தொடர்பு:14:55 (21/02/2019)

சவுதி இளவரசருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த பாகிஸ்தான்!

பாகிஸ்தான் சென்ற சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தங்க பிளேட் பொருத்திய இயந்திரத் துப்பாக்கியை பாகிஸ்தான் பரிசளித்துள்ளது. 

சவுதி இளவரசருக்கு பாகிஸ்தான் வழங்கிய இயந்திரத்துப்பாக்கி

சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தன் சுற்றுப்பயணத்தை பாகிஸ்தான் நாட்டிலிருந்து அவர் தொடங்கினார். ரியாத்திலிருந்து இஸ்லாமாபாத் நோக்கி வந்த அவரின் விமானம் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்ததும் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் பாதுகாப்பளித்தன. இஸ்லாமாபாத் நகரம் முழுக்க முகமது பின் சல்மான், சவுதி மன்னர் சல்மான் ஆகியோரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. பாகிஸ்தான் நாடாளுமன்ற வளாகத்தில் 125 அடி உயரத்தில் சவுதி இளவரசருக்குப் பிரமாண்ட கட் அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. 

சவுதி இளவரசர்

சவுதி இளவரசரை மனம் குளிர்வித்த பாகிஸ்தான் அவருக்குத்  தங்க பிளேட் பொருத்தப்பட்ட இயந்திரத் துப்பாக்கியை (The Heckler & Koch MP5) நினைவுப் பரிசாக அளித்தது. இந்த துப்பாக்கி ஜெர்மன் தயாரிப்பு. பாகிஸ்தான் கவனிப்பால் உச்சிகுளிர்ந்த சவுதி இளவரசர் அந்த நாட்டுக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக அறிவித்துள்ளார்.

தொடர்ந்து பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வருவது சவுதி இளவரசரின் பயணத் திட்டம். ஆனால், புல்மாவா தாக்குதலையடுத்து,  பாகிஸ்தானிலிருந்து நேரடியாக இந்தியாவுக்கு வர வேண்டாம் என்று சவுதி இளவரசரிடத்தில் இந்தியா கேட்டுக்கொண்டது. இதனால், பாகிஸ்தானிலிருந்து ரியாத்துக்குச் சென்ற சவுதி இளவரசர் அங்கிருந்தே மீண்டும் இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவில் சவுதி 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்திய சுற்றுப்பயணத்தை முடித்த சவுதி இளவரசர் தற்போது சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஸோகியை துருக்கி நாட்டில் வைத்து சவுதி இளவரசரின் உத்தரவின் பேரில் சவுதி அதிகாரிகள் கொன்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close