நடுக்கடலில் கடத்தல்காரர்களை அதிரவைத்த மெக்ஸிகோ கடற்படை! – குவியும் பாராட்டுகள் #Video | Mexico navy seizes more than 1,300 pounds of cocaine at sea

வெளியிடப்பட்ட நேரம்: 21:38 (21/02/2019)

கடைசி தொடர்பு:21:38 (21/02/2019)

நடுக்கடலில் கடத்தல்காரர்களை அதிரவைத்த மெக்ஸிகோ கடற்படை! – குவியும் பாராட்டுகள் #Video

மெக்ஸிகோவில், கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 630 கிலோ போதைப் பொருள்களை அந்நாட்டு கடற்படை அதிரடியாகப் பறிமுதல்செய்துள்ளது.

கடத்தல்

மெக்ஸிகோவில் உள்ள சினாலோவா மாநிலத்தில், கடல் வழியாக 1,300 பவுண்டு, அதாவது 630 கிலோ மதிப்புள்ள கொக்கைன் போதைப் பொருள்களைக் கடத்தல்காரர்கள் கடத்திச் செல்வதாக, அந்நாட்டு கடற்படைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, கடற்படையினர் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களில் சென்று, அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்த படகை சுற்றிவளைத்தனர்.

கடத்தல் படகுடன் நான்கு சக்திவாய்ந்த வெளி மோட்டார்கள் பொறுத்தப்பட்டிருந்ததால், அதிவேகமாகச் சென்றது. ஆனாலும், விடாமல் துரத்திய கடற்படை, ஒருகட்டத்தில் படகை சுற்றிவளைத்தனர். ஹெலிகாப்டரிலிருந்து கயிறு கட்டி இறங்கி, படகில் இருந்த கடத்தல்காரர்களைக் கைதுசெய்தனர். சினிமா பாணியில் நடந்த இந்த சேஸிங், மெக்ஸிகோ கடற்படைக்குப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்துள்ளது. மேலும், கடற்படையினர் கடத்தல்காரர்களை சுற்றிவளைக்கும் வீடியோ, இணையத்தில் செம வைரல்!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close