இரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்!- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan | Mother shoots three daughters dead with rifle

வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (22/02/2019)

கடைசி தொடர்பு:13:02 (22/02/2019)

இரவில் தூங்க மாட்டார்; அச்சத்திலே இருப்பார்!- 3 மகள்களைக் கொன்று நண்பர் வீட்டில் உயிரைவிட்ட தாய் #Michigan

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரியேன் மூரே. இவருக்கு மூன்று பெண் குழந்தைகள். எட்டு வயது மகள் கைரே, ஆறு வயது மகள் கேசிடி மற்றும் இரண்டு வயது மகள் அலைனா. இவர் தன் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.

மிச்சிகன்

Picture Credit ; Fox 47 news

கடந்த திங்கட்கிழமை மாலை தன் மகள்களை பள்ளியிலிருந்து அழைத்து வந்த ஆபிரியேன், தன் தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து தன் ஆண் நண்பரின் அங்கீகாரம் பெற்ற துப்பாக்கியை எடுத்து தன் மகள்களைச் சரமாரியாக சுட்டுக் கொலை செய்தார். அங்கிருந்து தன் ஆண் நண்பர் வீட்டுக்கு வந்த ஆபிரியேன் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த போலீஸ், ஆபிரியேன் சில மாதங்களாகவே மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததை அவரின் உறவினர்கள் வாயிலாகத் தெரிந்துகொண்டனர். பின்னர் ஆபிரியேன் சிகிச்சை பெற்ற மனநல மருத்துவமனையில் விசாரணை நடத்தினார்.

மிச்சிகன்

Picture Credit ; Fox 47 news


`ஆபிரியேன் இரவுகளில் தூங்குவதே கிடையாது. யாராவது தன்னைக் கொலை செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் தூங்காமல் விழித்துக்கொண்டிருப்பார். தன் மகள்களைக்கூட நெருங்க விடமாட்டார்’ என்று பெற்றோர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஒரு தாய் தன் குழந்தைக்காக உயிரைக் கூடக் கொடுப்பார். ஆனால் எந்தவொரு தாயும் தன் குழந்தையைக் கொல்லமாட்டார். அதுவும் தன் சுயநலத்துக்காக. அப்படிச் செய்யும் பெண்ணை எந்தச் சூழலாக இருந்தாலும் மக்கள் மன்னிக்கமாட்டார்கள். குன்றத்தூர் அபிராமியை இன்றுவரை அனைவரும் திட்டித் தீர்ப்பதற்கு இதுதான் காரணம். ஒன்றுமறியாத தன் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்துவிட்டு தன் ஆண் நண்பருடன் புதிய வாழ்க்கையை தொடங்க நினைத்துப் போலீஸில் சிக்கிக் கொண்டார். ஆபிரியேன் தன் மூன்று மகள்களைக் கொன்றதற்குப் பின்னணியில் அவரின் மனநலம் காரணமாக இருந்தாலும், அமெரிக்காவில் இந்தச் சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் வளர்ந்து வரும் துப்பாக்கி கலாசாரம், மனநல பிரச்னைகளும் இந்தச் சம்பவத்துக்கு ஒரு காரணம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close