`பெண்களுக்கு இதுவரை அளிக்கப்படாத உரிமை!'- அதகளப்படுத்தும் சவுதி இளவரசர் | Saudi Arabia appoints first female ambassador to US

வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (25/02/2019)

கடைசி தொடர்பு:12:59 (25/02/2019)

`பெண்களுக்கு இதுவரை அளிக்கப்படாத உரிமை!'- அதகளப்படுத்தும் சவுதி இளவரசர்

சவுதி வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டுக்கான தூதராக ஒரு பெண் நியமிக்கப்பட்டுள்ளார். 

ரீமா

இளவரசர் சல்மான் பதவியேற்றதும் உலகமே மூக்கின் மீது விரலை வைக்கும் அளவுக்குப் பெண்களின் வளர்ச்சியில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். ஆண்டாண்டுக் காலமாக அரேபிய நாடுகளில் பெண்களுக்கான உரிமைகளும் சுதந்திரமும் முழுமையாக வழங்கப்படுவதில்லை எனப் பிற நாடுகள் குற்றம்சுமத்துவது வழக்கம். அந்தக் கூற்றை சல்மான் பொய்யாக்கினார். சவுதி பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி வழங்கும் சட்டத்தை அமல்படுத்தினார். சவுதி பெண்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் என அறிவித்தார். அது மட்டுமல்ல, பொது இடங்களில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பெண் பாடகர்கள் பாடலாம், பெண்களுக்காகத் தனி விளையாட்டு அரங்கு என அதகளப்படுத்தினார் இளவரசர் சல்மான். சவுதியில் சமூக மாற்றங்களுக்கு அடித்தளம் போட்டதும் பொருளாதார தாராளமயமாக்கலுக்கு வித்திட்டதும் சர்வதேச அரங்கில் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தன.

சல்மான்

அதுமட்டுமன்றி முகமது பின் சல்மான், ``சவுதி அரேபியா விஷன்-2030" என்ற பெயரில் தொலை நோக்குத் திட்டத்தை முன்னெடுத்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் அங்கு பெண்களுக்கு இதுவரை அளிக்கப்படாத உரிமைகளை வழங்கி வருகிறார். அதன் ஒருபகுதியாக இளவரசியான ரீமா பிண்ட்மாஸ்டர் அல் சவுத்தை (Reema bint Bandar al-Saud), அமெரிக்காவுக்கான சவுதி தூதுவராக நியமித்துள்ளார்.

இதற்கு முன்னர் அமெரிக்காவுக்கான தூதராக, இளவரசர் சல்மானின் இளைய சகோதரர் காலித் பின் சல்மான் இருந்தார். அவரை நாட்டின் பாதுகாப்புத்துறை இணை அமைச்சராக நியமனம் செய்து ரீமாவை அந்த இடத்தில் அமர்த்தியுள்ளனர்.

ரீமா அமெரிக்காவில் படித்து பட்டம் பெற்றவர். சமூக சேவையின் மூலம் பிரபலமானவர். ரீமாவின் தந்தை பாண்டர் அல் சுல்தான் சவுத் 1983-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை, அமெரிக்க தூதராக இருந்தார் என்பது கூடுதல் தகவல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close