`அவளுக்கும் எனக்கும் சண்டை; நான் பிரதமர்கிட்ட பேசணும்’ - விமானத்தைக் கடத்த முயன்றவருக்கு நடந்த துயரம் | Biman flight hijack gunman shot dead

வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (25/02/2019)

கடைசி தொடர்பு:15:45 (25/02/2019)

`அவளுக்கும் எனக்கும் சண்டை; நான் பிரதமர்கிட்ட பேசணும்’ - விமானத்தைக் கடத்த முயன்றவருக்கு நடந்த துயரம்

டாக்காவில் இருந்து சிட்டகோங் வழியாகத் துபாய் செல்வதற்காக நேற்று மாலை 5.40 மணிக்கு டாக்கா விமான நிலையத்திலிருந்து பிமன் வங்கதேசம் ஏர்லைன் விமானம் புறப்பட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் அதில் பயணித்த ஒருவர் எழுந்து நின்று, தான் விமானத்தைக் கடத்தியுள்ளதாகவும் யாரேனும் தன்னை தடுக்க முயன்றால் மொத்த விமானத்தையும் வெடிக்க வைத்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

இந்தத் தகவல் விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிக்கப்பட்டவுடன் உடனடியாக சிட்டகோங் விமான நிலையத்தில் பிமன் விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர், அதில் பயணம் செய்த ஒருவரை மட்டும் பிணைக் கைதியாகப் பிடித்துக்கொண்டு மற்ற 133 பேரையும் விமானத்தைவிட்டு வெளியில் இறக்கியுள்ளார் அந்த மர்ம நபர்.

விமானத்தை கடத்திய அந்த அடையாளம் தெரியாத நபருடன் வங்கதேசம் போலீஸார் விசாரணை நடத்தி அவரின் கோரிக்கையை கேட்டனர். அதற்கு, ‘ தன் மனைவியுடன் தனக்கு பெரிய பிரச்னை இருப்பதாகவும் இது தொடர்பாக வங்கதேசம் பிரதமரிடம் பேச வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். பின்னர், இரண்டு மணி நேரமாகப் போலீஸாருக்கும் மர்ம நபருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.

போலீஸார் எவ்வளவு வலியுறுத்தியும் மர்ம நபர் சரண்டராவதை மறுத்துவிட்டார். பின்னர், இரவு 7.20 மணிக்கு சிட்டகோங் விமான நிலையத்தில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். இறுதியில் விமானத்தைக் கடத்துவதாக நாடகமாடிய அந்த மர்ம நபரைத் துணை ராணுவப்படையினர் சுட்டுக் கொன்றனர். அவர் பிணைக் கைதியாகப் பிடித்துவைத்திருந்த பயணியும் விமானமும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். விமானத்தைக் கடத்த முயன்ற அந்த நபரின் தகவல்கள் மற்றும் அவரின் மனைவியின் தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை எனக் காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


[X] Close

[X] Close