`தற்காப்பு தாக்குதல் நடத்த எங்களுக்கும் உரிமை இருக்கிறது’ -கொந்தளித்த பாகிஸ்தான் | Pakistan has the right to retaliate and self defence -Shah Mehmood Quresh

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (26/02/2019)

கடைசி தொடர்பு:14:00 (26/02/2019)

`தற்காப்பு தாக்குதல் நடத்த எங்களுக்கும் உரிமை இருக்கிறது’ -கொந்தளித்த பாகிஸ்தான்

'இந்தியத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம்' என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி பேசியுள்ளார்.

பாகிஸ்தான் செயலர் குரோஷி


புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடிகொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ளது. பால்கோட், சாக்கோதி, முஸாஃபராபாத் பகுதியில் செயல்பட்டுவந்த ஜெய்ஸ்- இ- முகமது அமைப்பின் முகாம்கள்மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக, இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்திருந்தார். இந்தியாவில் இதற்கு முன்பு நடந்த பல்வேறு தாக்குதலின் பின்னணியில் இந்த அமைப்பு செயல்பட்டு வந்தாகவும், இதுகுறித்து பாகிஸ்தானிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இது ராணுவ நடவடிக்கை இல்லை தீவிரவாதிகளுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை என்றார்.

இந்தியாவின் இந்தத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி அவரச ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். இந்தக் கூட்டம், இஸ்லாமாபாத்தில் நடைபெற்றது. இதற்குப் பின்னர் பேசிய குரேஷி, “இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் உரிய பதிலடி கொடுக்கும். தற்காப்புக்காகத் தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை உள்ளது. போர் நிறுத்த உடன்பாட்டை மீறி இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது” என்றார்.


[X] Close

[X] Close