`பதிலடி கொடுக்க எங்களுக்கும் முழு உரிமை உண்டு!’- பாகிஸ்தான் | Pakistan has the right to retaliate and self-defence

வெளியிடப்பட்ட நேரம்: 18:21 (26/02/2019)

கடைசி தொடர்பு:18:21 (26/02/2019)

`பதிலடி கொடுக்க எங்களுக்கும் முழு உரிமை உண்டு!’- பாகிஸ்தான்

``எங்களைப் பாதுகாத்துக்கொள்ள பதிலடி கொடுக்க முழு உரிமையும் உள்ளது” என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியா தாக்குதல்

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது. அதிகாலை 3.30 மணிக்கு, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 12 மிராஜ் ரக போர் விமானங்கள் மூலம் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது 1,000 கிலோ குண்டுகள் வீசப்பட்டன. இதில், பால்கோட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த தீவிரவாத முகாம்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாக விமானப்படையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிப்பதாக, ஏ.என்.ஐ ஊடகம் தெரிவித்தது. இந்தத் தாக்குதலை இந்திய  வெளியுறவுத் துறைச் செயலாளர் விஜய் கோகலேவும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ``இன்று இந்தியா தாக்கியது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாம் ஆகும். இந்தத் தாக்குதலில் பல தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்தியா பாகிஸ்தான்

இந்த முகாமை வழிநடத்தியவர், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரான மசூத் அசாரின் மைத்துனர், மவுலான யூசுஃப் அசார்” என்றார். இந்தத் தாக்குதல் நடத்திய விமானப்படை வீரர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலைத்தொடர்ந்து, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. முப்படை அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், பயங்கரவாதிகள் முகாமில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

``அனைத்து விதமான நிகழ்வுகளுக்கும் தயாராக இருங்கள்” என்று அந்நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இம்ரான்கான்  அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மெமூத் குரேஷி, ``எல்லை மீறி இந்தியா பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியா இன்று ஆக்கிரமிப்பை நிகழ்த்தியுள்ளது. ஆகவே, பாகிஸ்தான் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள பதிலடி கொடுக்க முழு உரிமையும் உள்ளது” என்றார். 


[X] Close

[X] Close