உலக அளவில் டிரெண்ட் ஆகும் #SayNoToWar ஹேஷ்டேக்! | #SayNoToWar Hashtag trending worldwide

வெளியிடப்பட்ட நேரம்: 20:22 (27/02/2019)

கடைசி தொடர்பு:20:22 (27/02/2019)

உலக அளவில் டிரெண்ட் ஆகும் #SayNoToWar ஹேஷ்டேக்!

இந்தியா பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் நிலவும் தற்போதைய சூழலில், சமூக வலைதளங்களில் போர் வேண்டாம் என்ற சிந்தனையுடன், #SayNoToWar என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.

ட்விட்டர்

இந்திய விமானப்படையைச் சேர்ந்த அபினந்தன் என்ற வீரர், பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டதையடுத்து, இந்தியா பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. அபினந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே சிக்கியிருக்கும் புகைப்படம், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. முகத்தில் ரத்தக்காயத்தோடு அவர் இருக்கும் புகைப்படம் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அனைவரும் அவர் உயிரோடு மீட்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில்,  #SayNoToWar என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைதளங்களில் டிரெண்டாக்கி வருகிறார்கள். அதேபோல #Abhinandan என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. இதன்மூலம், இந்திய விமானப்படை வீரர் அபினந்தன், இந்தியர்களின் மனங்களை வென்றுவருகிறார் என்பதும் பெரும்பான்மை மக்கள், போர் வேண்டாமென்ற மனநிலையில் இருப்பதும் தெரியவருகின்றன.

ஹேஷ்டேக்

போர் வேண்டாமென்ற #SayNoToWar ஹேஷ்டேக்கை நேற்றைய தினம், சஹ்ரிகா கிஸ்சு என்ற பத்திரிகையாளர் உருவாக்கியதாகக் கூறியுள்ளார். அவர் உருவாக்கிய ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளதற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதே ஹேஷ்டேக்கில் பதிவிட்டுள்ள ஹடிக் ரிஸ்வான் என்ற பதிவர், ``போர்களால் வீரர்கள் உயிரிழக்கிறார்கள். அவர்களின் குடும்பத்தினர் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால், அரசியல்வாதிகள் எவ்வித துன்பத்தையும் அனுபவிப்பதில்லை என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அதோடு இந்தியா, பாகிஸ்தான் தரப்பில் உயிர்நீத்த வீரர்களின் இறுதி அஞ்சலிக் காட்சியை வருத்தத்தோடு பதிவிட்டு இருபக்கமும் வீரர்கள்தான் உயிரிழக்கிறார்கள் என்பதைக் குறிப்பால் காட்டியுள்ளார்.

ஹேஷ்டேக்

அடுத்து, நரைன் கோல்ஹி என்ற பதிவர், அமைதியை விரும்பும் மக்கள் போர் வேண்டுமென எதிர்பார்க்க மாட்டார்கள் என்று கூறியுள்ளதோடு, இந்தியா பாகிஸ்தான் இடையே சமாதானத்தை விரும்பும் மணற்சிற்பம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இப்படியாக, போர் வேண்டாம் என்று மறுப்பதற்காக ஒவ்வொரு இந்தியரும் கூறியுள்ள கருத்துகள் ஆழமாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளன. போர் மேகம் சூழ்ந்து, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பல விமான நிலையங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுவரும் நிலையில், மக்களனைவரும் போர் வேண்டாமென ஒருமித்து குரல் எழுப்புவது உணர்வுபூர்வமானது.

ஹேஷ்டேக்

தற்போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், போரை நான் விரும்பவில்லை என்றும், இந்தியாவோடு பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு நம்பிக்கையளிப்பதாக உள்ளது. 


[X] Close

[X] Close