'நாங்கள் சாக வேண்டும்!’ - குடும்பத்தினர் 5 பேரைக் கொன்ற அம்மா, மகளின் அமானுஷ்ய வாக்குமூலம் | Mother, daughter charged in family murders

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (28/02/2019)

கடைசி தொடர்பு:10:42 (28/02/2019)

'நாங்கள் சாக வேண்டும்!’ - குடும்பத்தினர் 5 பேரைக் கொன்ற அம்மா, மகளின் அமானுஷ்ய வாக்குமூலம்

தன் பதின்வயது மகளுடன் சேர்ந்து, பென்சில்வேனியா பெண் ஒருவர், தன் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரைக் கொலைசெய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, தலைநகர் டெல்லியில் மூடநம்பிக்கைகளால் மூழ்கடிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோன்ற சம்பவம் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்துள்ளது.

கொலை

பென்சில்வேனியாவில் ஷானா என்னும் 45 வயது பெண், அப்பார்ட்மென்ட்டில் தன் குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். நேற்று, அவர்களின் வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, ஐந்து சடலங்களுக்கு மத்தியில் ஷானா மற்றும் அவரது மகள் அமர்ந்திருந்தனர். அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர், போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த சம்பவம்குறித்து ஷானாவின் உறவினர் கூறுகையில், ``கடந்த சில நாள்களாகவே ஷானாவின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. மிகவும் விசித்திரமாக நடந்துகொண்டார். அவரின் பிள்ளைகளைக் குறித்து எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. கடந்த வாரம் ஷானாவின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். 'நீங்கள் ஒரு பிசாசு; வெளியே போங்கள். நீங்கள் இங்கு வரக் கூடாது. உலகம் அழியப்போகிறது’ என்று அந்தப் பிள்ளைகள் என்னை விரட்டியடித்தனர். இப்படியொரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்று தெரிந்திருந்தால், அன்றே அந்தப் பிள்ளைகளை அழைத்துவந்திருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

கொலை

போலீஸ் தரப்பில் கூறுகையில், 'ஷானா தன் 19 வயது மகளுடன் இணைந்து தன் குடும்பத்தினரைக் கொலை செய்துள்ளாரா அல்லது தற்கொலைக்குத் தூண்டியிருக்கிறாரா என்பது தெரியவில்லை. ஷானாவின் இரண்டு மகள்கள், சகோதரி, சகோதரியின் இரட்டைக் குழந்தைகள் உள்ளிட்ட ஐந்து பேர் பிணமாகக் கிடந்தனர். அவர்கள் அனைவரும் ஷானாவால் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களாக விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனரா அல்லது ஷானா கொடுத்தாரா என்பது தெரியவில்லை. முதற்கட்ட விசரணையில், ஷானாவும் அவரின் மகளும் `எங்களை விடுங்கள் நாங்கள் சாக வேண்டும். உலகம் அழியப் போகிறது’ என்று கூறிக்கொண்டே இருந்தனர்’’ என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close