வீணாகும் கண்ணாடித் துண்டுகளில் இருந்து டூத்பேஸ்ட், சோப்பு -குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தி்ன் அசத்தல் முயற்சி | Scientists turn waste glass into everyday products

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (28/02/2019)

கடைசி தொடர்பு:09:10 (28/02/2019)

வீணாகும் கண்ணாடித் துண்டுகளில் இருந்து டூத்பேஸ்ட், சோப்பு -குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தி்ன் அசத்தல் முயற்சி

கண்ணாடி

சமீப காலத்தில், பிளாஸ்டிக்கிலிருந்து எலெக்ட்ரானிக் பொருள்கள் வரை மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மனிதன் உருவாக்கியவற்றின் கழிவுகள் அப்படியே பூமிக்குப் போனால், விளைவுகள் இன்னும் அதிகமாய் இருந்திருக்கும். அந்த வரிசையில், வீணாகும் உடைந்த கண்ணாடித் துண்டுகளும் இணையவுள்ளன. வீணாகும் கண்ணாடித் துண்டுகளில் இருந்து அன்றாடம் நாம் பயன்படுத்தும் டூத்பேஸ்ட், சலவைப்பொடி, சோப்பு மற்றும் உரம் உட்பட பலவற்றைத் தயாரிக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்தச் செயல்முறை மட்டும் சாத்தியமானால், ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான டன் கண்ணாடித் துகள்கள் நிலத்தில் கழிவுகளாகக் கொட்டப்படுவது தடுக்கப்படும். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் (University of Queensland) ஆய்வாளர்கள், இந்த ஆய்வை மேற்கொண்டுவருகின்றனர். வீணாகும் கண்ணாடித் துகள்களிலிருந்து திரவ சிலிகேட்டை (liquid silicate) பிரித்தெடுக்கும் முறையை மேம்படுத்திவருகின்றனர். திரவ சிலிகேட்டின் மூலம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல்வேறு பொருள்களைத் தயாரிக்க முடியும். அதுமட்டுமில்லாமல், கான்கீரிட்டுகள் போன்ற கட்டுமானப் பொருள்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தலாம்.

வழக்கமாக, சிலிகேட்டை உற்பத்திசெய்யும் முறைகளைவிட, இந்த முறை 50 சதவிகிதம் குறைவான செலவுடையது என்கிறார் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான ரை பீரே (Rhys Pirie). குறைவான ஆற்றல், குறைவான கச்சா பொருள்கள், குறைவான மூலதனம் எனப் பொருளாதாரரீதியாக லாபம் தரக்கூடிய செயலாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதன்மூலம், குப்பைக்குச் சென்று கொண்டிருந்த அனைத்துவிதமான கண்ணாடிக் கழிவுகளும் இனி விற்கப்படக்கூடிய பொருளாக மாற்றப்படும்.   

  


[X] Close

[X] Close