``20 ஆண்டுகளில் இல்லாத பசுமை; இந்தியா மற்றும் சீனாவுக்கு பாராட்டுகள்” - நாசா #NASA | The Earth Is Greener Than Two Decades Ago Says Nasa

வெளியிடப்பட்ட நேரம்: 14:23 (01/03/2019)

கடைசி தொடர்பு:14:23 (01/03/2019)

``20 ஆண்டுகளில் இல்லாத பசுமை; இந்தியா மற்றும் சீனாவுக்கு பாராட்டுகள்” - நாசா #NASA

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு உலகம் அதிக பசுமையாக மாறியுள்ளதாகவும் இவற்றிற்கு இந்தியாவும், சீனாவுமே முதன்மையாகத் திகழ்வதாக நாசா தெரிவித்துள்ளது. 

கேட்பதற்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தாலும் இதுதான் உண்மை என ஆய்வு அறிக்கைகளுடன் அறிவித்துள்ளது நாசா. இது தொடர்பாக பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள சுற்றுச்சூழல் துறையைச் சேர்ந்தவர்கள் நாசாவுடன் இணைந்து நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புவியின் பசுமை ஐந்து சதவிகிதம் அதிகரித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலப்பரப்பை விட தற்போது உலக அளவில் இரண்டு மில்லியன் சதுர கி.மீ இன்னும் அதிகமாகப் பசுமையாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அதிக மக்கள் தொகை நாடுகளான இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளிலும் மூன்றில் ஒரு பங்கு அதிக பசுமையாகியுள்ளது. ஆனால், அங்கு ஒன்பது சதவிகிதம் மட்டுமே தாவரங்கள் வளர்வதற்கு ஏற்ற இடமாக உள்ளதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக தாவரங்கள் நட்டதற்காக இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளது. 

2016-ம் ஆண்டு உத்தரபிரதேசம் மாநிலத்தில் 24 மணி நேரத்தில் 50.4 மில்லியன் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்தது இந்தியா. அதன் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 5-ம் தேதி மத்திய பிரதேசத்தின் நர்மதை நதியையொட்டி ஒரே நாளில் 66 மில்லியன் மரக்கன்றுகளை நட்டு தம் சாதனையைத் தாமே முறியடித்து மீண்டும் உலக சாதனை படைத்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. 


 


[X] Close

[X] Close