வீடு முழுவதும் பரவிய தீ! - தம்பியைக் காப்பாற்ற தன் உயிரை மாய்த்துக்கொண்ட பாசக்கார சிறுமி | Chinese girl burns to death protecting her younger brother from fire

வெளியிடப்பட்ட நேரம்: 17:47 (01/03/2019)

கடைசி தொடர்பு:17:51 (01/03/2019)

வீடு முழுவதும் பரவிய தீ! - தம்பியைக் காப்பாற்ற தன் உயிரை மாய்த்துக்கொண்ட பாசக்கார சிறுமி

சீனாவில் 12 வயது சிறுமி தன் தம்பியைத் தீ விபத்திலிருந்து காப்பாற்றுவதற்காகத் தன் உயிரையே கொடுத்துள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஸிமோ

Credits : THE STRAITS TIMES 


சீனாவின் ஹுனான் மாகாணத்தில் சென் ஸிமோ என்னும் 12 வயது சிறுமி தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். பிப்ரவரி 22-ம் தேதி அதிகாலை தன் 5 வயது தம்பியுடன் தூங்கிக் கொண்டிருந்தார். பக்கத்து அறையில் தாய் தந்தை தூங்கிக் கொண்டிருந்தனர். திடீரென ஏதோ எறியும் வாசனை வந்ததும் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டார் சென் ஸிமோ. அறை ஜன்னல்கள் தீப்பிடித்து எறிந்துகொண்டிருந்தது. தீ மெத்தையிலும் பரவியிருந்தது. சென் ஸிமோ சற்றும் யோசிக்காமல் தன் போர்வையை தன் தம்பிமீது போர்த்திவிட்டு, வேறு போர்வையை கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்தார். அதற்குள் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை உணர்ந்த அவரின் பெற்றோர்கள் வந்துவிட்டனர். சென் ஸிமோ மயங்கி விழுந்தார்.

இரண்டு போர்வைக்குள் குறைவான தீக்காயங்களுடன் மயங்கிக் கிடந்தார். ஸிமோ உடல் முழுவதும் தீக்காயம். நடந்ததை ஸிமோவின் பெற்றோர் புரிந்துகொண்டனர். இரண்டு குழந்தைகளையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஸிமோவுக்கு 55% தீக்காயம். ஸிமோவின் தம்பிக்கு 28% தீக்காயம். ஐந்து நாள் சிகிச்சை கொடுக்கப்பட்டும் பலனின்றி ஸிமோ உயிரிழந்தார். ஸிமோவின் குட்டித் தம்பி பிழைத்துக்கொண்டார்.

சிறுமி

ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த ஸிமோவின் தந்தை, 'ஒரு வேளை ஸிமோ தன் கனமான போர்வையை தானே போர்த்திக்கொண்டு இருந்திருந்தால் ஓரளவுக்கு காயங்களுடன் பிழைத்திருப்பாள். ஆனால் அவள் தன் தம்பியைத் தீ நெருங்கவிடாமல் இருக்கவே போராடிக் கொண்டிருந்திருக்கிறார். எங்களுக்கு இரண்டாவது மகன் பிறந்ததுமே ஸிமோவைப் பற்றி நாங்கள் அதிகம் கவலைப்பட்டதில்லை. அவளை அவளே பார்த்துக்கொள்வாள். எங்கள் மகனை பார்த்துக் கொள்ளவே அதிக நேரம் செலவிட்டோம். இன்று ஸிமோ எங்களோடு இல்லை. ஆனால், அவள் இல்லாத ஒவ்வொரு நொடியும் நரகமாகச் சுடுகிறது’ என்று கதறி அழுதார். Rest in Peace ஸிமோ!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close