`நாங்கள் பேசிவிட்டோம்; புல்வாமா தாக்குதலுக்கு ஜெயிஷ் அமைப்பு காரணமில்லை’ - பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி! | Abhinandan not released under pressure, FM Qureshi asserts

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (02/03/2019)

கடைசி தொடர்பு:15:40 (02/03/2019)

`நாங்கள் பேசிவிட்டோம்; புல்வாமா தாக்குதலுக்கு ஜெயிஷ் அமைப்பு காரணமில்லை’ - பாகிஸ்தான் அமைச்சர் குரேஷி!

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்படுத்தப்பட்ட இந்திய விமானி அபிநந்தன், இந்தியா உட்பட உலக நாடுகளின் அழுத்தத்தின் காரணமாகவே பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்பட்டார் எனக் கூறப்படுகிறது. ஆனால், அதை மறுத்துள்ளார் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி.

அபிநந்தன்

இது தொடர்பாக பிபிசி ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``நாட்டையும், எங்கள் நிலப்பகுதிகளையும் விரோத சக்திகள் அபகரிக்கப் பாகிஸ்தான் அரசு என்றுமே அனுமதிக்காது. அந்தக் கும்பல்களின் மீது நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மண்ணில் உள்ள எந்த ஒரு ராணுவ வீரரும், ராணுவ அமைப்பும் ஆயுதங்களைப் பயன்படுத்தவோ அல்லது பயங்கரவாதத்தை பயன்படுத்தவோ நாங்கள் அனுமதிக்கமாட்டோம். 

குரேஷி

அழுத்தத்தின் காரணமாகவோ அல்லது கட்டாயத்தினாலோ இந்திய விமானி விடுவிக்கப்படவில்லை. நான் இந்தியாவுக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். உங்களின் கருணை எங்களுக்கு வேண்டாம், உங்கள் மக்களின் பரிதாபம் வேண்டாம். எங்களுக்கு அமைதி மட்டுமே போதும். புல்வாமா தாக்குதலுக்கு ஜெயிஷ் இ முகமது அமைப்புதான் காரணமா என எங்களுக்குச் சரியாக தெரியவில்லை. அந்த அமைப்பும் அதை ஒப்புக்கொண்டதாகத் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. ஜெயிஷ் அமைப்பின் தலைமையை தொடர்புகொண்டோம். ஆனால், புல்வாமா தாக்குதலில் அவர்களுக்குத் தொடர்பு இல்லை என்றே தெரிவித்தனர். 

ஜெயிஷ் அமைப்பைச் சேர்ந்த சிலரைத் தெரிந்தவர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். அவர்கள்தான் அந்த அமைப்பைத் தொடர்புகொன்று இதைத் தெரிவித்தனர்'' இவ்வாறு அவர் பேசியுள்ளார். 


[X] Close

[X] Close