ஹெச்.ஐ.வி தொற்றிலிருந்து மீண்ட இரண்டாவது நபர்! - சாதித்த மருத்துவர் | London patient becomes second man to be cleared of Aids

வெளியிடப்பட்ட நேரம்: 14:58 (05/03/2019)

கடைசி தொடர்பு:17:28 (05/03/2019)

ஹெச்.ஐ.வி தொற்றிலிருந்து மீண்ட இரண்டாவது நபர்! - சாதித்த மருத்துவர்

லண்டனைச் சேர்ந்த ஒருவர் ஸ்டெம்செல் மாற்றுச் சிகிச்சை மூலம் ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து முற்றிலுமாக மீண்டுள்ளார்.

எச்.ஐ.வி


கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கர் டிமோதி ப்ரவுன் என்பவருக்கு ஜெர்மனி மருத்துவமனை ஸ்டெம்செல் மாற்று அறுவைசிகிச்சை செய்து ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து மீட்டனர். தற்போதுவரை அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்படவில்லை. ஹெச்.ஐ.வி-யிலிருந்து மீண்ட ஒரே நபர் டிமோதி என்றுதான் இன்றுவரை அறியப்பட்டு வந்தது. ஆனால், லண்டனைச் சேர்ந்த ஒருவருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ஹெச்.ஐ.வி ஆராய்ச்சியாளருமான ரவீந்திர குப்தா ஹெச்.ஐ.வி தொற்றை குணப்படுத்தியுள்ளார்.

குப்தா
 

இதுகுறித்து பேசிய குப்தா, ``ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எலும்பு மஜ்ஜைகளை மாற்றி (Bone Marrow Transplant) ஹெச்.ஐ.வி தொற்றைக் குணப்படுத்தியுள்ளோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மற்றொருவர் தானம் செய்த எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல்களை இவருக்குச் செலுத்தினோம். இதன்மூலம் பாதிக்கப்பட்டவரின் உடலில் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்று கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. தற்போது இவரின் உடலில் ஹெச்.ஐ.வி நோய்த்தொற்று காணப்படவில்லை. இதை நாங்கள் லேப் டெஸ்ட் மூலம் உறுதி செய்துள்ளோம். மேலும், இந்தச் சிகிச்சை முறையில் நிறைய சிக்கல்களைச் சந்தித்தோம். அனைவரின் உடலும் ஸ்டெம் செல் சிகிச்சைக்கு ஒத்துழைக்காது. எனவே, மிகவும் கவனமாகச் சிகிச்சை அளித்தோம். அவரின் உடலில் தற்போது ஹெச்.ஐ.வி தொற்று இல்லை. ஆனால், இவ்வளவு சீக்கிரமாக அவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று மீண்டும் வராது என்று சொல்ல முடியாது. இன்னும் சில ஆண்டுகள் இவரின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close