`மீண்டும் போட்டியில்லை' - அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து ஹிலாரி! | I am Not Running for President says Hillary Clinton

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (05/03/2019)

கடைசி தொடர்பு:16:05 (05/03/2019)

`மீண்டும் போட்டியில்லை' - அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து ஹிலாரி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். 

ஹிலாரி

2016 ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் மற்றும் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்டு ட்ரம்ப் களம் கண்டனர். இதில் ஹிலாரியைப் பின்னுக்குத் தள்ளி ட்ரம்ப் வெற்றிகண்டு தற்போது அமெரிக்க அதிபராக இருக்கிறார். அவருடைய பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் முடிகிறது. இதனால் அடுத்த அதிபர் தேர்தலிலும் ஹிலாரி கிளின்டன் போட்டியிடலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், இதை மறுத்துள்ள ஹிலாரி, ``நான் முன்பு கூறியது போல நான் எதை நம்புகிறேனோ தொடர்ந்து அதற்காகப் பணியாற்றுவேன்.

டிரம்ப்

அதுதொடர்பாக தொடர்ந்து பேசவும் செய்வேன். இப்போது நாட்டில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் எனக்குப் பெரிய சங்கடங்களைக் கொடுக்கின்றன. எல்லோரும் 2020 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறீர்களா எனக் கேட்கிறார்கள். அதற்கான வாய்ப்புகள் இல்லை. வரும் அதிபர் தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் எங்கும் போய்விட மாட்டேன். ஜனநாயக கட்சி சார்பில் யார் போட்டியிட போகிறார்களோ, போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்களோ அவர்களைச் சந்தித்து பேசி வருகிறேன். அவர்களிடம் தற்போது நடைபெற்று வரும் ட்ரம்ப் ஆட்சியில் நிறைவேற்றப்படாத பிரச்னைகள், திட்டங்கள் குறித்து மக்களிடம் பேசும்படி அறிவுரை கூறி வருகிறேன்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close