லண்டன் வீதிகளில் முறுக்குமீசை, தாடியுடன் ரிலாக்ஸாக வலம்வரும் நிரவ் மோடி! | Nirav modi in London streets

வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (09/03/2019)

கடைசி தொடர்பு:11:16 (09/03/2019)

லண்டன் வீதிகளில் முறுக்குமீசை, தாடியுடன் ரிலாக்ஸாக வலம்வரும் நிரவ் மோடி!

மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரியான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அவர் மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் சிபிஐ அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகிறது. இது, பலரின் கவனத்துக்கு வரும் முன்னரே, அவரும் குடும்பத்தினரும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றனர். 

நிரவ் மோடி

அவர்களைக் கண்டறிந்து, மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டுவரும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுவந்தார்கள். சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டை பிறப்பித்திருந்தது. கடந்த வருடம், இன்டர்போல் அமைப்பும் நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டது.

நிரவ் மோடி போலி பாஸ்போர்ட் மூலம் பல நாடுகளுக்குச் சென்றுவருவதாகவும் தகவல்கள் வெளியானது. இதன் காரணமாக, அவர் எங்கு இருக்கிறார் என்பதில் குழப்பம் நிலவிவந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு அவர் இங்கிலாந்தில் இருப்பதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்தனர். 

லண்டன்

 தற்போது, அவர் லண்டன் நகரில் உற்சாகமாக வலம்வரும் வீடியோவை  `தி  டெலிகிராஃப்’ ஊடகம் வெளியிட்டிருக்கிறது. தனது காஸ்ட்டிலியான அப்பார்ட்மென்ட்டில் இருந்து வெளியே வந்தவரை டெலிகிராஃப் பத்திரிகையின் செய்தியாளர், பல்வேறு கேள்விகளைக் கேட்கிறார். ஆனால், நிரவ் மோடி எந்தக் கேள்விகளுக்கும் பதில் தராமல், நோ கமென்ட்ஸ் என்பதோடு முடித்துக்கொள்கிறார். 

நிரவ் மோடி

அவரை நாம் புகைப்படங்களில் பார்த்ததுபோல இல்லாமல், மீசை தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். லண்டனில் அவர் வைர வியாபாரம் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் தேடப்படும் நபர், இன்டர்போல் போலீஸாரால் ரெட் கார்னர் வழங்கப்பட்ட நபர், இங்கிலாந்தில் ரிலாக்ஸாக வலம்வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் தனது நண்பர் பெயரில் லண்டனில் தொடர்ந்து வைர வியாபாரத்தில் ஈடுபட்டுவருவதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. இது தொடர்பான கேள்விக்கும் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.  மேலும், அவர் வசிக்கும் காஸ்ட்லியான அப்பார்ட்மென்ட்டில் ஒரு ஃப்ளாட்டின் விலை, இந்திய மதிப்பில் 72 கோடியாம். 

 நிரவ் மோடி லண்டனில் வசிப்பது அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளதால், இந்தியா அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 


[X] Close

[X] Close