‘எத்தியோப்பியா விமான விபத்து; 149 பயணிகளின் நிலை?’- புறப்பட்ட 6-வது நிமிடத்தில் நடந்த சோகம்  | Ethiopian Airlines flight ET302 crashes en route to Kenya

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (10/03/2019)

கடைசி தொடர்பு:15:22 (10/03/2019)

‘எத்தியோப்பியா விமான விபத்து; 149 பயணிகளின் நிலை?’- புறப்பட்ட 6-வது நிமிடத்தில் நடந்த சோகம் 

எத்தியோப்பியாவின் ஆடிஸ் அபாபா நகரில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி சென்ற போயிங் -737 ரக விமானம் விழுந்து நொறுங்கியது. விமான விபத்துக்குள்ளானது குறித்து  எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஏனினும் இறப்பு குறித்து எந்த தகவலும் இல்லை

எத்தியோப்பியா விமான விபத்து

. எத்தியோபியா ஏர்லைஸ்ன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஆடிஸ் அபாபாவுக்கும் - நைரோபிக்கும் இடையே இயக்கப்பட்டு வந்த விமானம் விபத்துக்குள்ளானது என்பதை எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறது. ஆடிஸ் அபாபா சர்வேத விமான நிலையத்தில் இருந்து காலை 08.38 மணிக்குப் புறப்பட்ட விமானமானது 8.44 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை உயிரோடு இருப்பவர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த விமானம் எத்தியோபிய தலைநகரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிஷோஃப்டு (Bishoftu) என்ற இடத்தில் விழுந்துள்ளது.

அவசர உதவிகளுக்காக விமானம் விபத்துக்குள்ளான பகுதிக்கு எங்களது பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விமானத்தில் 149 பயணிகள் 8 விமானப் பணியாளர்கள் பயணம் மேற்கொண்டனர். இதில் பயணம் செய்த பயணிகள் குறித்த விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்தையடுத்து ஆடிஸ் அபாபாவில் இருந்து புறப்படும் சில விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டது மேலும் சில விமானங்கள் ரத்துசெய்யப்பட்டது.


[X] Close

[X] Close