''பாகிஸ்தான் அனுபவமே கிறிஸ்ட் சர்ச் கொலையாளியை உருவாக்கியது!'' -நியூஸி. பத்திரிகைத் தகவல் | Tarrant was "perhaps radicalised" while on traveled pakistan

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (16/03/2019)

கடைசி தொடர்பு:16:00 (16/03/2019)

''பாகிஸ்தான் அனுபவமே கிறிஸ்ட் சர்ச் கொலையாளியை உருவாக்கியது!'' -நியூஸி. பத்திரிகைத் தகவல்

நியூஸிலாந்தின் கிறிஸ்ட் சர்ச் நகரில் இரு மசூதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் பலியாகினர். துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட  பிரென்டன் டர்ரன்ட் என்ற  28 வயதான ஆஸ்திரேலியர் உள்ளிட்ட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று, கிறிஸ்ட் சர்ச் நீதிமன்றத்தில் பிரென்டன் டர்ரன்ட் ஆஜர்படுத்தப்பட்டார். வருகிற ஏப்ரல் 5- ந் தேதி வரை  அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, பிரென்டன் முகத்தில், குற்றச் செயலிலும் ஈடுபட்டதற்கான அடையாளமே காணப்படவில்லை. நீதிபதியின் விசாரணையைக்கூட கேலிக்கூத்துபோல ஒருவித ஏளனத்துடன்தான் அவர்  எதிர்கொண்டார். 

நியூசிலாந்து கொலையாளி

பிரன்டனிடம் இருந்து 5 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. போர்கள் அடிக்கடி நடைபெற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளான பல்கேரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளுக்குச் செல்வதை பிரென்டன்  வழக்கமாகக்கொண்டிருந்துள்ளார்.  மசூதியில், கொலை பாதகச் செயலில் ஈடுபட்ட பிரன்டன், பாடி பில்டிங்கில் ஈடுபாடுகொண்டவர். ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ஜிம்மில் பணிபுரிந்துவந்துள்ளார். 2017- ம் ஆண்டுதான் நியூஸிலாந்துக்குக் குடிபெயர்ந்துள்ளார். 'இஸ்லாமிய மக்கள்மீது வெறுக்கும் வகையில் பிரென்டன் ஒருபோதும் பேசியதில்லை' என்று அவரை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். 

நியூசிலாந்து கொலையாளி

கடந்த 2018- ம் ஆண்டு அக்டோபர் மாதம், பிரென்டன்  பாகிஸ்தானுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, வடகொரிய நாட்டில் உள்ள சம்ஜியான் போர் நினைவுச்சின்னத்துக்கும் சென்று பார்த்துள்ளார். இந்த நினைவுச்சின்னம், துப்பாக்கியுடன் ராணுவ வீரர்கள் பாய்வது போல அமைக்கப்பட்டிருக்கும். பாகிஸ்தான் மற்றும் வடகொரிய நகரங்களில் பார்த்த  விஷயங்கள், அனுபவங்கள், பிரான்டனை  மூர்க்கத்தனமாக்கியிருக்கும் என்று நியூஸிலாந்து ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது. 

பிரென்டனின் வடகொரிய சுற்றுப்பயணத்தின்போது எடுத்த புகைப்படத்தை news.com.au வெளியிட்டுள்ளது. கிறிஸ்ட் சர்ச் மசூதி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், உலகம் முழுக்க இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் பெருகியுள்ளதாக வேதனை தெரிவித்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close