'சீனாவுக்கு மறைமுகமாக உதவுகிறது'- கூகுள் மீது குற்றம் சாட்டும் பென்டகன் | US Military General says google indirectly working with China

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (16/03/2019)

கடைசி தொடர்பு:21:20 (16/03/2019)

'சீனாவுக்கு மறைமுகமாக உதவுகிறது'- கூகுள் மீது குற்றம் சாட்டும் பென்டகன்

கூகுள்

கூகுள் நிறுவனம், சீனாவுடன் இணைந்து செயல்பட்டுவருவதாக அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே  பல காலமாக மோதல் இருந்துவருகிறது. மோதல் காரணமாக, அமெரிக்காவின் தயாரிப்புகள் சிலவற்றைத் தடைசெய்துள்ளது சீன அரசு. உலகம் முழுவதிலும் பிரபலமாக இருக்கும் தேடுதல் இயந்திரமான கூகுளும் அதில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், சீனாவுடன் இணைந்து செயல்படுவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார், அமெரிக்க ராணுவ ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்ட் (Joseph Dunford). 'தி ஹில்' நாளிதழில் வெளியாகியுள்ள அறிக்கை ஒன்றில் இதை அவர் தெரிவித்துள்ளார்.

 ஜோசப் டன்ஃபோர்ட்

" கூகுள், சீனாவுடன் இணைந்து செயல்படுகிறது. இது சீன ராணுவத்துக்கு மறைமுகமாக உதவும் வகையில் உள்ளது." மேலும் "தொழில்துறை நிறுவனங்கள் சீனாவுடன் இணைந்து செயல்படும்போது கிடைக்கும் மறைமுக பலன்களைக் கவலையோடு கவனித்துக் கொண்டிருக்கிறோம்" என்றும் தெரிவித்திருக்கிறார். சமீப காலமாக, சீனாவுக்காகத் தணிக்கை செய்யப்பட்ட தேடு பொறி ஒன்றினை கூகுள் உருவாக்கும் முயற்சியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுவந்தது. அதற்கும் அமெரிக்க செனட்டர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. 


[X] Close

[X] Close