``15 லட்சம் வீடியோக்களை அழித்திருக்கிறோம்!” - ஃபேஸ்புக் எடுத்த துரித நடவடிக்கை | Facebook says it has deleted 15 lakhs videos that were uploaded recently

வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (18/03/2019)

கடைசி தொடர்பு:16:55 (18/03/2019)

``15 லட்சம் வீடியோக்களை அழித்திருக்கிறோம்!” - ஃபேஸ்புக் எடுத்த துரித நடவடிக்கை

பேஸ்புக் நியூஸிலாந்து துப்பாக்கிச் சூடு

நியூசிலாந்து நாட்டில் சென்ற வாரம் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மசூதி ஒன்றுக்குள் நுழைந்த ஒருவன் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாகச் சுட்டுக் கொன்றதை ஃபேஸ்புக்கிலும் லைவ் செய்தான். உலகையே உலுக்கிய இந்தச் சம்பவத்தை லைவ் செய்த வீடியோ பின் வைரலானது. இந்த வீடியோவை உடனடியாக சமூக வலைதளங்கள் தங்களது பக்கத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கையும் எழுந்தது. இப்போதுவரை ஃபேஸ்புக்கில் 15 லட்சம் வீடியோக்கள் அழிக்கப்பட்டிருப்பதாக ஃபேஸ்புக் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இதில், 12 லட்சம் வீடியோக்கள் அப்லோடு செய்யும்போதே அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன.

இன்னமும் சிலர், துப்பாக்கிச் சூடு வீடியோவை கொஞ்சம் எடிட் செய்து, ஃபேஸ்புக்கின் சிஸ்டத்தால் கண்டறிய முடியாதபடி அனிமேஷன் செய்து அப்லோடு செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். அவற்றையும் ஃபேஸ்புக் தடுத்து வருவதாகத் தெரிவித்திருக்கிறது. நிறுவனங்கள் இத்தகைய முடிவுகளை உடனுக்குடன் எடுப்பது பாராட்டுதலுக்குரியது. போலவே, நெட்டிசன்களும் இது போன்ற வீடியோக்களை அப்லோடு செய்யாமலும், அப்படி யாராவது செய்தால் அதை ஷேர் செய்யாமலும் இருக்க வேண்டியது அவசியம். பாதுகாப்பான இணையம் என்பது நம்மிலிருந்தே தொடங்குகிறது என்பதை நாம் உணர வேண்டும்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க