மசூத் அசாருக்கு ஆதரவு... சொந்த நாட்டில் இஸ்லாமியர்களுக்கு சீனா இழைக்கும் கொடுமை தெரியுமா? | China Says 13,000 Xinjiang 'Terrorists' Have Been Arrested

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (19/03/2019)

கடைசி தொடர்பு:16:25 (19/03/2019)

மசூத் அசாருக்கு ஆதரவு... சொந்த நாட்டில் இஸ்லாமியர்களுக்கு சீனா இழைக்கும் கொடுமை தெரியுமா?

சீனாவில், ஜின்ஜியாங் மாகாணத்தில் 13,000 இஸ்லாமிய மக்கள்,  தீவிரவாதிகள் எனச் சித்திரிக்கப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

சீனாவில் இஸ்லாம் மக்கள்

இந்த மாகாணத்தில், லட்சக்கணக்கான உய்கர் இன இஸ்லாமிய மக்கள் வசிக்கின்றனர். அனைவரும் சீனர்கள் போன்றே உடை அணிய வேண்டும். தாடி ,தொப்பி வைத்திருக்கக் கூடாது என்று சீன அரசு உத்தரவிட்டுள்ளது. மதம் தொடர்பான எந்த விஷயத்தையும் இஸ்லாமிய மக்கள் விரும்பியபடி செய்ய முடியாது. இளைய தலைமுறையினர் தாடி வைத்திருக்க மாட்டார்கள். இஸ்லாமிய மக்கள் தங்களுக்குரிய அடையாளங்களைத் துறந்தே சீன அரசின் நெருக்கடியின் கீழ்  வாழ்ந்துவருகின்றனர். சுமார் 10 லட்சம் உய்கர் இன மக்கள், பல்வேறு இடர்பாடுகளை சீனாவில் சந்தித்துவருவதாகச் சொல்லப்படுகிறது.

சீன அரசு நாளிதழான 'குளோபல் டைம்ஸ்' சமீபத்தில்  வெளியிட்டுள்ள செய்தியில், ' சீன மக்கள் அனைவரும் ஒருங்கே தெரிய வேண்டும். இஸ்லாமிய மக்கள் என்பதற்காகத்  தனித்து தெரியக் கூடாது. எனவே, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இஸ்லாமிய மக்கள், உடை, உணவு, பழக்கவழக்கங்களில் பிற சீன மக்களைப் போல தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். பெண்கள் ஹிஜாப் அணியக் கூடாது ' என்று புதிய சட்டத்தை சீனா  வகுத்துள்ளதாகக் கூறியுள்ளது. 

சீனாவில், கடந்த 2014- ம் ஆண்டு முதல் தற்போது வரை 13,000 உய்கர் இன மக்களைத் தீவிரவாதிகள் எனக் கூறி, சீன அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.  மேலும்,  1,588 பயங்கரவாத கும்பல்கள் அழிக்கப்பட்டுள்ளன. 2,042 கிலோ வெடி பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. விதிமுறைக்கு மாறான மத பழக்க வழக்கங்களைப்  பின்பற்றிய  30,645 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 3,45,229  தீவிரவாதத்தைத் தூண்டும் நோட்டீஸ்கள் அழிக்கப்பட்டுள்ளன' என்று சீன ராணுவம் அறிவித்துள்ளது. 

சீனா

சீன ராணுவம், ஜின்ஜியாங் மாகாணத்தை தொடர்ந்து கண்காணித்துவருகிறது. பாகிஸ்தானில் பதுங்கியுள்ள மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐ.நா-வில் 4 முறை தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும், வீட்டோ பவரை பயன்படுத்தி தடை ஏற்படுத்திவரும் சீனா, தன் நாட்டில் வசிக்கும் இஸ்லாமிய மக்களை இப்படி நடத்துவதுகுறித்து சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் 'டான்'  நாளிதழ் எழுதியுள்ள தலையங்கத்தில்.' தீவிரவாதிகளில் நல்லவர் கெட்டவர்  இல்லை. பாகிஸ்தானை உலக அரங்கில் தனிமைப்படுத்த நினைக்கும் இந்தியாவை எதிர்கொள்ள மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதே சரியானது. சீனா, பாகிஸ்தான் நாடுகள் மசூத் அசாரை காப்பற்ற நினைப்பது சரியல்ல ' என்று கூறியுள்ளது. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க