பொது இடத்தில் எல்லை மீறல் ... குழந்தைகள் கண் எதிரே பெண்களுக்குக் கசையடி! | unmarried couples whipped in public in Indonesia

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (21/03/2019)

கடைசி தொடர்பு:14:30 (21/03/2019)

பொது இடத்தில் எல்லை மீறல் ... குழந்தைகள் கண் எதிரே பெண்களுக்குக் கசையடி!

ந்தோனேசியாவில் பொது இடங்களில் எல்லை மீறிய 5 திருமணமாகாத ஜோடிகளுக்குப் பொது இடத்தில் கசையடி தண்டனை அளிக்கப்பட்டது.

இந்தோனேசியாவில்  பெண்களுக்கு கசையடி

உலகில் அதிக இஸ்லாமிய மக்கள் தொகை கொண்ட இந்தோனேசியாவில் ஷரியத் சட்டம் பின்பற்றப்படுகிறது. திருணமாகாத ஜோடிகள் பொது இடத்தில் கரங்களைப் பற்றிக்கொண்டு நடப்பது கூட குற்றமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள, ஏகெக் மாகாணத்தின் தலைநகரான பந்தாக்கில் 5 திருமணமாகாத ஜோடிகள் பொது இடத்தில் எல்லை மீறியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தொடர்ந்து அந்த ஜோடிகளை இந்தோனேசியாவின் ரிலீஜியஸ் போலீசார்  கைது செய்தனர். இந்த ஜோடிகள் பொது இடத்தில் கட்டிப்பிடித்துக்கொண்டு இருந்ததாகச் சொல்லப்படுகிறது விசாரணையில் அவர்களுக்குக் கசையடி தண்டனை வழங்கத் தீர்ப்பளிக்கப்பட்டது. 

பந்தாக் நகரில் மசூதி அருகே பொது இடத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 4 முதல் 22 கசையடி கொடுக்கப்பட்டது. கசையடியைக் காண குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். இந்தோனேசியாவில் பொது இடங்களில் எல்லை மீறுவோரைக் கைது செய்ய ரிலீஜியஸ் போலீஸ் என்ற பெயரில் தனிப்படை இயங்கி வருகிறது. தண்டனை வழங்கிய அதிகாரி கூறுகையில் 'இக்கட்டான சூழலில்தான் இத்தகைய தண்டனை வழங்கப்பட்டது. வருங்காலத்தில் இது போன்ற குற்றங்கள் தவிர்க்கப்பட வேண்டும்' என்றார். கடந்த டிசம்பர் மாதத்தில் மைனர் பெண் ஒருவருடன் பாலியல்ரீதியாக தொடர்பு வைத்திருந்த இருவருக்கு தலா 100 கசையடி தண்டனை வழங்கப்பட்டது. 

இந்தோனேசியாவில் இத்தகைய கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதற்குத் தடை விதிக்க வேண்டும். இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இத்தகைய தண்டனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வர வேண்டுமென்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க