`அட நான் வேற பட்லர்யா' - ட்விட்டரில் பாடகரை டேக் செய்த ரசிகர்கள் | Netizens tagged wrong person instead of cricketer Jos butler

வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (26/03/2019)

கடைசி தொடர்பு:20:02 (26/03/2019)

`அட நான் வேற பட்லர்யா' - ட்விட்டரில் பாடகரை டேக் செய்த ரசிகர்கள்

ஜோஷ் பட்லர்

ஐ.பி.எல் சீசன் தொடங்கி 4 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இந்த 4 ஆட்டங்களிலும் முக்கிய பேசுபொருளாக மாறியிருப்பது நேற்றைய ஆட்டத்தில் அஸ்வின் வீசிய 12-வது ஓவரில் நடந்த அந்தச் சம்பவம்தான். அந்த ஓவரின் கடைசிப் பந்தை வீச வந்த அஸ்வின், நான் ஸ்ட்ரைகர் எண்டில் நின்றுகொண்டிருந்த ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட்டாக்கினார். இதற்குச் சமூக வலைதளங்களில் உலகமெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இந்த விவகாரத்தில் துளி கூட சம்பந்தமே இல்லாத ஒருவரை  உள்ளே இழுத்து விட்டிருக்கிறார்கள் ட்விட்டர்வாசிகள்.

ஐபிஎல்

ட்வீட் செய்யும் சில பேர் கிரிக்கெட் வீரர் ஜாஸ் பட்லருக்கு பதிலாக பிரபல பாடகர் ஜோஷ் பட்லரை இந்த விஷயத்தில் டேக் செய்துள்ளனர். எதற்காக திடீரென தனது ட்விட்டர் இவ்வளவு பரபரப்பாக இருக்கிறது எனப் பார்த்த அவருக்கு விஷயம் புரிந்திருக்கிறது. அதற்கு ஜாலியாக ஒரு ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார் அவர். அதில் "கிரிக்கெட் உலகில் என்ன நடக்கிறதென்று தெரியவில்லை. ஆனால் நான் Jos Butler இல்லை Josh butler" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க