கரடியை வேட்டையாடி தடயத்தை அழிக்க முயலும் தந்தை மகன்! - பதற வைக்கும் வீடியோ | video shows father and son illegally killing bear and cubs

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (29/03/2019)

கடைசி தொடர்பு:12:53 (29/03/2019)

கரடியை வேட்டையாடி தடயத்தை அழிக்க முயலும் தந்தை மகன்! - பதற வைக்கும் வீடியோ

கரடி


மனிதர்கள்தாம் விலங்குகளின் மிகப்பெரிய எதிரிகள். தோல், பற்கள், தந்தங்கள் போன்றவற்றுக்காக விலங்குகள் வேட்டையாடப்படுவது வாடிக்கையாகி விட்டது. சிலர் பொழுதுபோக்கிற்காகவும் இதைச் செய்கின்றனர். அமெரிக்காவில் உள்ள அலெஸ்கா மாகாணத்தில் தந்தையும், மகனும் சேர்ந்த ஒரு தாய் கரடியையும், 2 குட்டிகளையும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் வீடியோ சமீபத்தில் வெளியானது. கரடியின் வசிப்பிடத்திற்குச் சென்று அதை இருவரும் வேட்டையாடியுள்ளனர். இவை அனைத்தும் அங்குள்ள ஒரு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த கேமராவில் பதிவான நபர்கள் ஆண்ட்ரு (Andrew Renner) மற்றும் அவரது மகன் ஓவன் (Owen ski). 

அந்த வீடியோவில், ஆண்ட்ரு ஒரு வேட்டைத் துப்பாக்கியுடனும், அவரது மகன் ஓவன் ஒரு கைத்துப்பாக்கியுடனும் கரடியின் வசிப்பிடத்திற்குச் செல்கின்றனர். தங்களுக்கு ஏதோ ஆபத்து என்று உணர்ந்த கரடிகள் அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்துவிட்டன. பயத்தின் காரணமாக தொடர்ந்து கூச்சலிடுகின்றன. ஆண்ட்ரு தனது துப்பாக்கியால் கரடியைச் சுடுகிறார். குட்டிகள் கூச்சலிடும் சத்தமும் அந்த வீடியோவில் கேட்கிறது. இரண்டு குட்டிகளை ஆண்ட்ரு சுட்டுத்தள்ளுகிறார். இதனையடுத்து இருவரும் சேர்ந்து அந்தப் புதரில் இறந்துகிடந்த பெண் கரடியை வெளியில் இழுத்து வருகின்றனர். ஓவர் அதன் அருகே அமர்ந்துகொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். அதன்பின்னர் இருவரும் சேர்ந்து கரடியின் தோலை உரித்து எடுக்கின்றனர். இரண்டு நாள்களுக்குப் பின்னர் அப்பகுதிக்கு மீண்டும் வந்து தடயங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


தற்போது இவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அலெஸ்கா பகுதி வேட்டையாடத் தடைசெய்யப்பட்ட பகுதி. அதை  மீறியதால் இருவரின் வேட்டையாடும் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ருவுக்கு 9000 அமெரிக்க டாலர் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது படகுகள், வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.