திடீரென்று வீசிய சூறாவளி! - நிழற்குடையுடன் 4 மீட்டர் மேலே தூக்கிச்செல்லப்பட்ட துருக்கி நபர் | Surveillance footage captures moment strong winds lift man into the air

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (29/03/2019)

கடைசி தொடர்பு:13:55 (29/03/2019)

திடீரென்று வீசிய சூறாவளி! - நிழற்குடையுடன் 4 மீட்டர் மேலே தூக்கிச்செல்லப்பட்ட துருக்கி நபர்

துருக்கியில் வீசிய கடும் சூறாவளிக்காற்று, குடையுடன் ஒரு நபரை தூக்கிச்செல்லும் வீடியோ காட்சி, சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

துருக்கி

துருக்கியில், கடந்த சில நாள்களுக்கு முன் கடுமையான சூறாவளிக்காற்று வீசியது. சாலையில் இருந்த பொருள்கள் எல்லாம் தூக்கி வீசப்பட்டன. சாலையோரத்தில் கடைகள் வைத்திருப்பவர்கள் நிழலுக்காகப் பெரிய குடைகளை வைத்திருந்தனர். அந்தக் குடைகள் எல்லாம் காற்றில் தூக்கிவீசப்பட்டன. சாலையில் நடந்துசெல்பவர்களை இது தாக்கிவிடும் என்பதால், இரும்பு ஸ்டாண்டுடன் இருந்த குடைகளை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது வீசிய சூறாவளி, குடையைத் தாக்கியது. அதைத் தாங்கிப் பிடிப்பதற்காக ஒரு நபர், அந்த இரும்பு ஸ்டாண்டின் மீது ஏறி நிற்கிறார். பலமாக வீசிய சூறாவளி, குடையுடன் அந்த நபரையும் தூக்கிச்சென்றது. சில அடி தூரம் தூக்கி வீசியது. இதில், அந்த நபருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த நபர் Kocadalli என்பது தெரியவந்துள்ளது.


இந்தச் சம்பவம்குறித்துப் பேசியுள்ள Kocadalli, ''நான் தற்போது நலமாக இருக்கிறேன். அந்தப் பலமான காற்று என்னை தூக்கிக்கொண்டு பறந்தது. அது, மேலும் சில மீட்டர் தூரம் பயணிப்பதுபோல தெரிந்தது. நான் 3-ல் இருந்து 4 மீட்டர் தூரம் பறந்ததும், அதிலிருந்து குதித்துவிட்டேன் என்றார்.

இந்த வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்...