கல்லெறிந்து கொல்லும் புதுச் சட்டம்! - புருனேவில் எழும் எதிர்ப்புக் குரல் | Brunei brings in death by stoning as the punishment for gay and adultery

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (29/03/2019)

கடைசி தொடர்பு:18:00 (29/03/2019)

கல்லெறிந்து கொல்லும் புதுச் சட்டம்! - புருனேவில் எழும் எதிர்ப்புக் குரல்

புருனே நாட்டில், கொள்ளையடிப்பவர்களின் கை விரல்கள் துண்டிக்கப்படுதல், கள்ளக்காதலில் ஈடுபடுபவர்களை, பொதுமக்கள் முன்னிலையில் கல்லால் அடித்துக் கொல்லுதல் போன்ற தண்டனைகள் ஏற்கெனவே அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், பாலியல் தொழிலாளிகள், ஆண் ஓரினச் சேர்க்கையாளர்கள் மீதும் கல்லெறிந்து கொல்லும் புதுச் சட்டத்தை புருனே அறிவித்துள்ளது. சென்ற வருடம் டிசம்பர் மாதம் 29-ம் தேதி, புருனே நாட்டின் அட்டர்னி ஜெனரலின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்ட இந்தச் சட்டம், இந்த வருடம், வரும் ஏப்ரல் 3-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புருனே சுல்தான்

PC: cnn.com

கொள்ளையடிப்பவர்களின் கை விரல்களை வெட்டுகிற சட்டம் அமலானபோதே, மனித உரிமையாளர்கள் கண்டனக்குரல்கள் எழுப்ப ஆரம்பித்தார்கள். தவிர, உலகளாவிய பொது மன்னிப்பு அமைப்பின் தென்கிழக்கு ஆசியா தொடர்பான ஆராய்ச்சியாளர் ரேச்சல் சோவா ஹாவர்ட் ( Rachel Chhoa Howard), ``புருனேவின் இந்தத் தீய தண்டனைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மனித உரிமைகளுக்கு ஏற்ப, புருனேவின் குற்றவியல் சட்டங்களை மீளாய்வு செய்ய வேண்டும். இந்தக் கொடூரமான தண்டனைகளுக்குச் சர்வதேச சமூகம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்'' என்று தன்னுடைய எதிர்ப்புக் குரலை மிக அழுத்தமாக எழுப்பியுள்ளார். 

ரேச்சல்

PC: twitter.com

புருனேவின் மன்னரும் பிரதமருமான சுல்தான் ஹஸ்சானஸ் போல்கியாவோ, அரசாங்க இணையதளத்தில், ``மற்றவர்கள் எங்கள் சட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தங்கள் நாட்டை மதிப்பவர்கள் அதன் சட்டங்களையும் மதிப்பார்கள்'' என்று சொல்லியிருக்கிறார்.