பாகிஸ்தான் எஃப்-16 விமானங்களை அமெரிக்கா எண்ணியது... சரியாக இருக்கிறதாம்! | US 'count' found no Pakistani F-16 fighter jets missing

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (05/04/2019)

கடைசி தொடர்பு:13:40 (05/04/2019)

பாகிஸ்தான் எஃப்-16 விமானங்களை அமெரிக்கா எண்ணியது... சரியாக இருக்கிறதாம்!

ந்திய போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தானின் எஃப்- 16 விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்பட்டது. இந்த ரக விமானங்களை எதிரி நாட்டுடன் போரிடப் பயன்படுத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன்தான் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கியிருந்தது. எஃப்- 16 விமானத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் அம்ரான் ரக ஏவுகணையின் பாகங்களையும் இந்தியா ஆதாரமாகக் காட்டியது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட எஃப் - 16 விமானங்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய அமெரிக்கா தன் நாட்டைச் சேர்ந்த இரு விமானப்படை அதிகாரிகளைப் பாகிஸ்தானுக்கு அனுப்பியது எனவும் அதில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய எஃப்- 16 விமானங்களின் எண்ணிக்கை சரியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமெரிக்க ஊடகமான Foreign Policy தெரிவித்திருக்கிறது. 

அமெரிக்காவின் எஃப்-16

புல்வாமா தாக்குதலையடுத்து இந்தியப் போர் விமானங்கள் பாகிஸ்தானின் பால்கோட்டில் இருந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பு முகாம் மீது தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்தன. இந்திய போர் விமானங்கள் அவற்றை விரட்டிச் சென்றபோது, போர் விமானி அபிநந்தன் தன் மிக்- 21 பிசான் ரக விமானத்தில் எஃப்- 16 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படை அறிவித்திருந்தது. பாகிஸ்தான் தரப்பில் எஃப்-16 விமானங்கள் பயன்படுத்தவில்லை. சீன தயாரிப்பான ஜே.எஃப்- 17 ரக போர் விமானத்தைப் பயன்படுத்தியதாக கூறப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க