மாலத்தீவில் நாடாளுமன்றத் தேர்தல்! - நாளை வெளியாகும் முடிவுகள் | Maldives polling today; results will be announced tomorrow

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (06/04/2019)

கடைசி தொடர்பு:17:00 (06/04/2019)

மாலத்தீவில் நாடாளுமன்றத் தேர்தல்! - நாளை வெளியாகும் முடிவுகள்

மாலத்தீவில், 19-வது நாடாளுமன்றத்தைத் தேர்வுசெய்யவும் புதிய அதிபரைத் தேர்வுசெய்யவும், இன்று தேர்தல் நடைபெறுகிறது. உள்ளூர் நேரப்படி, காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, சுமுகமான முறையில் நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மாலத்தீவு தேர்தல்

மாலத்தீவில், இந்தத் தேர்தலுக்காக 500 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாலத்தீவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தங்கியுள்ள திருவனந்தபுரத்திலும் ஒரு வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும் என்றும் அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன. 

தேர்தல் முடிவுகள் நாளை காலை முதல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல கட்சிகளை உள்ளடக்கிய குடியரசாகக் கடந்த 2008-ம் ஆண்டில் மாலத்தீவு உருவான பின்னர் நடைபெறும் மூன்றாவது தேர்தல் இதுவாகும். மொத்தம் 87 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வுசெய்வதற்கான இந்தத் தேர்தலில், முன்னாள் அதிபர் முகமது நஷீத், நாடாளுமன்ற சபாநாயகர் காசிம் இப்ராகிம் உட்பட 386 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, நஷீத் தலைமையிலான மாலத்தீவு ஜனநாயகக் கட்சிக்கும், முக்கிய எதிர்க்கட்சியான மாலத்தீவு முற்போக்குக் கட்சி மற்றும் மக்கள் தேசிய காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க