செவ்வாய் கிரகப் பயணத்துக்கான முதல் படி!...இன்ஜினை ஸ்டார்ட் செய்த ஸ்பேஸ் எக்ஸ் | Space x succesfuly tested Starhopper suborbital vehicle

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (06/04/2019)

கடைசி தொடர்பு:23:00 (06/04/2019)

செவ்வாய் கிரகப் பயணத்துக்கான முதல் படி!...இன்ஜினை ஸ்டார்ட் செய்த ஸ்பேஸ் எக்ஸ்

ஸ்பேஸ் எக்ஸ்

அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா உட்படப் பல நாடுகள் இன்னும் சில வருடங்களில் மனிதனைச் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளன. அதற்காக முயற்சியில் முன்னிலையில் இருக்கிறது எலான் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ். அந்நிறுவனம் வரும் 2025-ம் ஆண்டில் மனிதர்களைச் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஸ்பேஸ் எக்ஸ் அது தொடர்பாக பல்வேறு சோதனைகளை நடத்தி வருகிறது. செவ்வாயில் இறங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட StarHopper என்ற விண்கலம் சில நாள்களுக்கு முன்னால் முதல் முறையாக இயக்கிப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

StarHopper

இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். சோதனையின் போது வெற்றிகரமாக விண்கலம் மேலே எழும்பியது என்றும், அதற்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளை எட்டியது என்றும் அவர் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். விநோதமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன இந்த StarHopper விண்கலத்தின் படம் கடந்த சில மாதங்களாகவே இணையத்தில் பரவி வந்தது. கடந்த புதன் கிழமை டெக்சாஸில் இதன் இன்ஜின் ஸ்டார்ட் செய்யப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது 2550 டன் அளவுக்கு உந்து சக்தி வெளிப்பட்டதாக எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.