`உலகைப் பற்றிய என் புரிதலை இந்திய மண் மாற்றிவிட்டது!’ - புதிய மனிதராக மாறிய வில் ஸ்மித் |  Will Smith Gets Mesmerised by India

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (08/04/2019)

கடைசி தொடர்பு:15:25 (08/04/2019)

`உலகைப் பற்றிய என் புரிதலை இந்திய மண் மாற்றிவிட்டது!’ - புதிய மனிதராக மாறிய வில் ஸ்மித்

ஹாலிவுட் ஸ்டார் வில்ஸ்மித் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டது குறித்து மனம் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.

வில் ஸ்மித்

வில் ஸ்மித் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தன் அனுபவத்தை ``willsmith’s bucket list’’ என்னும் பெயரில் வீடியோ தொடராக வெளியிட்டு வருகிறார். அந்தத் தொடருக்காக சமீபத்தில் இந்தியா வந்திருந்தார். ஹரித்வார், தாஜ்மஹால் உள்ளிட்ட இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கிருக்கும் மக்களுடன் உரையாடினார். மும்பை  சாலைகளில் தன் நண்பருடன் ஆட்டோ ஓட்டி மகிழ்ந்துள்ளார். நடிகர் ரன்வீர் சிங் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான கரன் ஜோஹர் ஆகியோருடன் இணைந்து நிகழ்வு ஒன்றில் நடனம் ஆடி மகிழ்ந்துள்ளார். ஸ்மித் நடனம் ஆடிய காட்சிகள் கரன் ஜோஹரின் `ஸ்டூடண்ட் ஆஃப் தி யேர்’ படத்தில் வெளியாக உள்ளன. மேலும், கங்கை ஆரத்தியில் கலந்துகொண்டு பூஜையும் செய்துள்ளார் வில் ஸ்மித். இவை அனைத்தையும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

ஆட்டோ ஓட்டும் வில் ஸ்மித்

``கடவுள் அனுபவம் வயிலாகத்தான் உனக்கு கற்றுக்கொடுப்பார் என்று என் பாட்டி சொல்லியிருக்கிறார். இந்தியாவின் மாறுபட்ட கலாசாரம், அழகிய நிறங்கள், மக்கள், இயற்கையின் எழில் என்னை புது மனிதராக உணரச் செய்தது. என்னைப் பற்றிய, என் கலையைப் பற்றிய, இவ்வுலகின் நிஜங்களைப் பற்றிய என் புரிதலை மாற்றியுள்ளது’’ என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க