அம்மாவும், மகளும் ஒரே விமானத்தில் பைலட்... வைரல் சம்பவம்! | Tweet showing a photo of Mother-Daughter Pilot Team Goes Viral

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (09/04/2019)

கடைசி தொடர்பு:18:00 (09/04/2019)

அம்மாவும், மகளும் ஒரே விமானத்தில் பைலட்... வைரல் சம்பவம்!

கடந்த மாதம் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து அட்லாண்டாவுக்கு டெல்டா விமான சேவையின் விமானம் ஒன்றில் பயணம் செய்திருக்கிறார் ஜான் ஆர்.வாட்ரெட் (@ERAUWatret). அந்தப் பயணத்தின்போது அந்த விமானத்தை இயக்கிய பைலட்கள் இருவருமே பெண்கள், அதுவும் தாய்-மகள் என்ற விஷயத்தை அருகில் இருப்பவர்கள் பேசுவதை வைத்து அறிந்திருக்கிறார். எம்பரி ரிட்டில் என்ற வான்வெளிப் பொறியியல் பல்கலைக்கழக வேந்தராக இருப்பதால் என்னவோ ஜான் ஆர்.வாட்ரெட்டுக்கு பெண் விமானிகளின் சக்தி என்ன என்பது தெரிந்திருக்கிறது. விமானப் பணிப்பெண்களிடம் அனுமதி பெற்று இருவருடனும் சிறிதுநேரம் பேசி விமானிகள் அறையில் இருக்கும் அவர்களைப் புகைப்படம் எடுத்து  "Inspiration for young women" என அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். 

அம்மாவும், மகளும் ஒரே விமானத்தில் பைலட்

அப்படிப் பதிவிடப்பட்ட இந்தப் புகைப்படத்தை ட்விட்டர்வாசிகள் சரமாரியாக ரீ-டிவீட், லைக் செய்ய இப்போது அது செம வைரல். இதுவரை 18,000-க்கும் மேலான ரீட்வீட்கள்; 51,000-க்கும் மேலான லைக்குகள் பெற்றிருக்கிறது இந்தப் புகைப்படம். இந்த வரவேற்பு ஜானுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. இதைப்பற்றி அவரிடம் சிலர் கேட்டபோது, ``நான் பெரிதாக ட்வீட் செய்வதில்லை" என்று கூறியிருக்கிறார். தங்கள் பல்கலைக்கழகம் வான்வெளித் துறையில் இருக்கும் அனைத்துப் பணிகளிலும் பெண்கள் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உழைத்துக்கொண்டிருக்கிறது. இந்த ட்வீட்டுக்கு வரவேற்பு தனக்கு மேலும் உற்சாகத்தைத் தருவதாக தெரிவித்தார்.  

வைரல் ட்விட்டர் பதிவை காண கிளிக் செய்யவும்!

அவர் பயணம் செய்த விமானத்தின் கேப்டனாக வென்டி ரெக்ஸனும், ஃபர்ஸ்ட் ஆபீஸராக அவரின் மகள் கெல்லி ரெக்ஸனும் இருந்திருக்கின்றனர். இதில் கூடுதல் ஆச்சர்யம் என்னவென்றால் கெல்லியின் சகோதரியும் ஒரு பைலட் தானாம். இவர்களைப் பற்றி கூறுகையில், ``இந்த விஷயத்தில் மகள்களுக்கு ரோல் மாடல்கள் வெளியே இல்லை, அது அவர்களது அம்மாதான். ஆனால், இவர்கள் அனைவருமே பெண்களுக்கு ரோல்மாடல்கள்" என்றார் ஜான் ஆர்.வாட்ரெட்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க