பெட் ஷாப்பில் ஷாப்பிங் செய்த ஒட்டகம்! - அமெரிக்க விநோதம் | Shopper brings his huge Camel to super market

வெளியிடப்பட்ட நேரம்: 22:07 (12/04/2019)

கடைசி தொடர்பு:22:07 (12/04/2019)

பெட் ஷாப்பில் ஷாப்பிங் செய்த ஒட்டகம்! - அமெரிக்க விநோதம்

ஜெஃப்ரி என்ற ஒட்டகத்திற்கு பெட் ஸ்மார்ட் ஷோரூமைச் சுற்றிக்காட்ட அதன் முதலாளி ஸ்காட் லூயிஸ் விரும்பினார். அதற்கான சிறப்பு அனுமதியைப் பெற்றபின், ஹாயாக தனது ஒட்டகத்தோடு ஷோ ரூமுக்குள் நடந்துசென்று சுற்றிக்காட்டினார்.

வாரக்கடைசியானால் மனிதர்கள் மட்டும்தான் ஷாப்பிங் செய்ய வேண்டுமா? விலங்குகளுக்கும் அந்த ஆசை இருக்காதா என்ன?. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள மஸ்கெகான் நகரிலுள்ள 'பெட் ஸ்மார்ட்' என்ற ஷோ ரூமில் வளர்ப்புப்பிராணிகளுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஷோ ரூமின் சிறப்பு என்னவென்றால், வளர்ப்புப்பிராணிகளை வளர்ப்பவர்கள், அந்த பிராணிகளையும் உடன் அழைத்து வந்து ஷாப்பிங் செய்யலாம். அதன்படி, நாய், பூனை, எலி, விதவிதமான பறவைகள், முயல் உள்பட குறிப்பிட்ட சில வகைப் பாம்புகள் வரை ஷோ ரூமுக்குள் அழைத்துவர அனுமதியுண்டு.

ஒட்டகம்

இந்த ஷோ ரூமுக்கு அருகில் லூயிஸ் ஃபார்ம்ஸ் & பெட்டிங் ஷூ எனப்படும் வளர்ப்புப்பிராணிகளின் சரணாலயம் அமைந்துள்ளது. அங்கே வளர்க்கப்படும் ஜெஃப்ரி என்ற ஒட்டகத்திற்கு பெட் ஸ்மார்ட் ஷோரூமைச் சுற்றிக்காட்ட அதன் முதலாளி ஸ்காட் லூயிஸ் விரும்பினார். அதற்கான சிறப்பு அனுமதியைப் பெற்றபின், ஹாயாக தனது ஒட்டகத்தோடு ஷோ ரூமுக்குள் நடந்துசென்று சுற்றிக்காட்டினார். ஷோ ரூமினுள் ஒட்டகத்தை எதிர்பார்க்காத வாடிக்கையாளர்கள், ஆச்சர்யத்தோடும், சற்று பயத்தோடும் தள்ளி நின்றபடி ஒட்டகம் ஷாப்பிங் செய்வதை புகைப்படமெடுக்கத் தொடங்கிவிட்டார்கள். ஒட்டகம் எவ்விதத் தயக்கமும் இல்லாமல் ஷோ ரூம் முழுவதையும் பொறுமையாகச் சுற்றிப்பார்த்தபின்னர் "எனக்கு எதுவுமே வாங்கப்பிடிக்கல" என்பதுபோல வெளியேறியது!. 

ஒட்டகம்

அமெரிக்காவில், வளர்ப்பு விலங்குகளை இப்படி ஷாப்பிங் அழைத்துச்செல்வது அவ்வப்போது நடப்பதுண்டு. இதற்கு முன்னர், டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள கடையொன்றினுள் பிரமாண்டமான மாடு ஒன்றை ஷாப்பிங் அழைத்துச்சென்ற சம்பவமும் நடந்திருக்கிறது!.