`அது காமெடி என சிரித்துக்கொண்டு இருந்தோம்.. ஆனால்...?' - காமெடி ஷோவின்போது நடந்த சோகம் | Stand Up comedian dies in the stage during show

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (13/04/2019)

கடைசி தொடர்பு:10:00 (13/04/2019)

`அது காமெடி என சிரித்துக்கொண்டு இருந்தோம்.. ஆனால்...?' - காமெடி ஷோவின்போது நடந்த சோகம்

ஸ்டான்ட் அப் காமெடியன்களுக்கு (Stand-up Comdian) எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் இருப்பார்கள். இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் ஸ்டான்ட் அப் காமெடியன்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். வீட்டில் நடக்கும் சம்பவங்கள் தொடங்கி உலக அரசியல் வரை பேசி இந்த காமெடியன்கள் நம்மைச் சிரிக்கவும் வைத்துச் சித்திக்கவும் வைத்து விடுவார்கள். 

காமெடியன் இயான் காக்னிட்டோ

வெளிநாடுகளில் இது போன்ற ஸ்டாண்ட் - அப் காமெடிகள் பார்களில் தினமும் நடக்கும். அதேபோன்றுதான் இங்கிலாந்து நாட்டின் பைசெஸ்டர் நகரில் உள்ள அடிக் பாரிலும் கடந்த வியாழக்கிழமை இரவில் தொடங்கியது அந்த காமெடி ஷோ. பிரபல ஸ்டாண்ட் - அப் காமெடியன் இயான் காக்னிட்டோ தனது நகைச்சுவையான பேச்சுகளால் அங்கிருந்தவர்களைச் சிரிக்க வைத்துக்கொண்டு இருந்தார். 
திடீரென ஒரு அமைதி. தான் அமர்திருந்த நாற்காலியில் அமைதியாக இருந்தார் காக்னிட்டோ. ``நாங்கள் அது அவரது காமெடி ஷோவின் ஒரு அங்கம் என நினைத்து தொடர்ந்து 5 நிமிடங்கள் சிரித்துக்கொண்டு இருந்தோம். ஆனால் உண்மையைப் பின்னர்தான் உணர்ந்தோம்” என்றார் அங்கு இருந்த நபர் ஒருவர். ஆமாம், உண்மையில் அவர் ஹார்ட் அட்டாக் காரணமாக மரணமடைந்துவிட்டதாக அவரைச் சோதித்த மருத்துவக்குழு தெரிவித்தது. 

இயான்

Photo Credit: Pixel8000

அங்கிருந்தவர்கள் சிரித்துக்கொண்டு இருந்தத்ஹுக்கு காரணம் இருந்தது. அவர் அமைதியாவதற்கு முன்னதாக, ஸ்ட்ரோக் குறித்த காமெடிகளை தெரிவித்து கொண்டு இருந்தார். அதுபோன்று அவர் நடிப்பதாக நம்பி சிரித்திருக்கின்றனர். ஆனால் அவர் மரணித்துவிட்டார். பால் பார்பியரி என்ற இயற்பெயர் கொண்ட இவரது மரணம் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதாக உலகின் பல காமெடியன்கள் தெரிவித்துள்ளனர்.

`ஸ்டாண்ட் - அப் காமெடி குறித்து அறிமுகமில்லாத நமராக இருந்தால் உங்களுக்கு இவரைக் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் தெரிந்தவர்களுக்கு, இவரது ஷோவை மேடைகளில் பார்த்தவர்களுக்கு இது நிச்சயம் பேரிழப்பாக இருக்கும்' என காமெடியன் ஹாவுண்ட் தெரிவித்துள்ளார்.