`385 அடி நீள இறக்கை, ஆறு இன்ஜின்கள்'..வெற்றிகரமாகப் பறந்த உலகின் மிகப்பெரிய விமானம் | World's largest plane takes flight successfully

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (15/04/2019)

கடைசி தொடர்பு:14:20 (15/04/2019)

`385 அடி நீள இறக்கை, ஆறு இன்ஜின்கள்'..வெற்றிகரமாகப் பறந்த உலகின் மிகப்பெரிய விமானம்

விமானம்

இதுவரை உலகில் உருவாக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய விமானம் வெற்றிகரமாக மேலெழும்பிப் பறந்திருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் மொகாவி (Mojave) பாலைவனத்தில் கடந்த சனிக்கிழமையன்று இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த விமானத்தை Stratolaunch என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. மிகப்பெரிய 385 அடி நீள இறக்கையைக் கொண்ட இந்த விமானத்தில் இரண்டு உடற் பகுதிகள் இருக்கின்றன, ஆறு இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. மணிக்கு 280 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிய இந்த விமானம் அதிகபட்சமாக 15,000 அடி உயரத்தில் பறந்த பின்னர் பத்திரமாகத் தரையிறங்கியது.

Stratolaunch

விமானங்களை ராக்கெட் ஏவுவதற்கு உதவும் வகையில் ஒரு விமானத்தை உருவாகும் நோக்கில் Stratolaunch நிறுவனத்தை மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பால் ஆலன் 2011-ம் ஆண்டில் தொடங்கினர். செயற்கைக்கோள்கள் அடங்கிய ராக்கெட்டை இந்த விமானம் பூமியிலிருந்து 35,000 அடி உயரத்துக்கு தூக்கிச் செல்லும். அதன் பின்னர் அங்கிருந்து ராக்கெட் விண்வெளியை நோக்கிக் கிளம்பும்.

Stratolaunch

ஸ்ட்ராட்டோஸ்பியர் என்ற இந்த அடுக்கிலிருந்து ராக்கெட் ஏவப்படும் போது அதற்கான எரிபொருள் தேவை குறையும் என்பதால் ராக்கெட் ஏவும் செலவும் குறையும். Northrop Grumman என்ற நிறுவனம் அதனுடைய Pegasus XL என்ற ராக்கெட்டை இந்த முறையில் ஏவ முடிவெடுத்திருக்கிறது. வரும் 2022-ம் ஆண்டு முதல் இது முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆலன் தொடங்கினார். இரு மாதங்களுக்கு முன் புற்றுநோய் தாக்கி இறந்துபோனார். ஆலனின் கனவுத் திட்டம் தற்போது நிறைவேறியுள்ளது. ஆனால், அதைப் பார்க்கத்தான் ஆலன் உயிரோடு இல்லை.