இந்தியர்களுக்குத் தலைகுனிவு! - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை | UK City Announces Rs 13,000 Fine to Stop Indians From Spitting Paan

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (16/04/2019)

கடைசி தொடர்பு:08:00 (16/04/2019)

இந்தியர்களுக்குத் தலைகுனிவு! - பிரிட்டன் அரசு வைத்த எச்சரிக்கைப் பலகை

இந்தியர்களுக்கு இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் எது தெரியுமா… சாலைகளில் எச்சில் துப்பும் பழக்கம். குறிப்பாக வட மாநிலத்தவர்கள் பான் போன்ற புகையிலையைச் சாப்பிட்டு சாலையிலேயே எச்சில் துப்பிவிடுவார்கள். இந்தப் பழக்கத்தை வெளிநாட்டுக்குச் சென்றால் கூட இவர்கள் மாற்றிக் கொள்ளமாட்டார்கள் போலும். ஒரு சிலர் இப்படி நடந்து கொள்வதால் ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் அவமதிப்பு ஏற்படுகிறது.

பிரிட்டன்

உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்களை அவமதிக்கும் விதமாக பிரிட்டனில் எச்சரிக்கைப் பலகை ஒன்றை வைத்துள்ளனர். பிரிட்டனில் லெய்சஸ்டர் என்னும் நகரில்தான் இந்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர். குறிப்பாக குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் அதிகம் வசிக்கும் இடம் அது. நீண்ட காலமாகவே அங்குச் சுகாதார பிரச்னை நிலவி வந்துள்ளது. சாலைகளில், நடைபாதையில், சுவர்களில் பான் எச்சில் கறைகள் படிந்துள்ளது. இதனால் கடுப்பான லெய்சஸ்டர் நகர ஆணையம், காவல்துறையுடன் சேர்ந்து அறிவிப்பு பலகை ஒன்றை ஆங்காங்கே வைத்துள்ளன. அதில் ``பொது இடங்களில் பான் துப்புவது சுகாதாரமற்ற செயல். சமூகத்துக்கு எதிரான செயல். அவ்வாறு செய்பவர்களுக்கு £150 (Rs 13,000) அபராதம் விதிக்கப்படும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையில் குஜராத்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருக்கும் வெளிநாட்டவர் ஒருவர் இதைப் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர, இந்தியர்களைக் குறித்து விமர்சனங்கள் எழத் தொடங்கிவிட்டன. இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தலைகுனிவு என இந்தியர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர். 

இந்தச் செய்தியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதை இங்கே பதிவிடலாம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க