`` 'உதவி செய்யுங்கள்’ என்று பரிதாபமாகப் பார்த்தது!''- கடலில் 130 மைல் நீந்திவந்த நாயால் உருகும் தொழிலாளி | Dog found swimming 130 miles off the coast 

வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (17/04/2019)

கடைசி தொடர்பு:13:25 (19/04/2019)

`` 'உதவி செய்யுங்கள்’ என்று பரிதாபமாகப் பார்த்தது!''- கடலில் 130 மைல் நீந்திவந்த நாயால் உருகும் தொழிலாளி

தாய்லாந்துக் கரையோரத்திலிருந்து சுமார் 130 மைல் (220 கிலோமீட்டர்) தொலைவில் இருக்கும் எண்ணெய்க் கிணற்றில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு அருகே, ஒரு நாய் நீந்தி வந்ததைப் பார்த்து அனைவரும் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

நாய்
  

பிரௌன் நிறத்தில் இருந்த அந்த நாய், தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த எண்ணெய்க் கிணற்றுக்கு அருகே நீச்சல் அடித்துக் கொண்டு வந்தது. குளிரில் நடுங்கியவாறு இருந்த அந்த நாயைப் பார்த்து தொழிலாளர்களின் மனம் உருகியது. இவ்வளவு தொலைவுக்கு நாய் எப்படி நீந்திக்கொண்டு வந்தது, எங்கிருந்து வந்தது எனத் தெரியாமல் தொழிலாளர்கள் குழம்பிப்போனார்கள். நாயைத் தூக்கிவந்து இதமான போர்வையைப் போர்த்தி படுக்கவைத்தனர். 

நாய்
 

இந்தச் சம்பவம்குறித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த விட்டிசாக் (Vitisak Payalaw) என்னும் தொழிலாளி, ``ஏப்ரல் 12-ம் தேதி, கடற்கரைப் பகுதியில் பிரௌன் நிறத்தில் ஒரு அழகான நாய், நாங்கள் வேலை செய்யும் எண்ணெய்க்கிணற்றுக்கு அருகே கடலில் நீந்திக்கொண்டு வந்தது. நாங்கள் வேலை செய்யும் பகுதிக்கு கப்பலில் மட்டுமே வரமுடியும். 130 மைல் தொலைவில்தான் கரை உள்ளது. அங்கிருந்து அந்த நாய் எப்படி நீந்தி வந்தது என்பது புரியவில்லை. எங்கள் பணிமேடையில் ஏற முயற்சி செய்தது. ஆனால், அலைகளின் வேகத்தால் அதனால் ஏற முடியாமல் சறுக்கியது.  

நாய்

 

பணிமேடையில் இருந்து இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த எங்களை, ’’உதவி செய்யுங்கள்’’ என்று பரிதாபமாகப் பார்த்தது. கயிற்றை அதன் கழுத்தில் கட்டி,மேலே தூக்கினோம். பின்னர், சுத்தமான தண்ணீரை குடிக்கக் கொடுத்தோம். அதற்கு Boonrod என்று பெயர் வைத்துள்ளோம். அப்படியென்றால், survivor என்று பொருள். சோர்வாகக் காணப்பட்ட பூன்ராட் சற்று நேரத்தில் எங்களுடன் விளையாடத் தொடங்கியது.  பிலிப்பைன்ஸ் நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பூன்ராட்டை, தாய்லாந்து விலங்குகள் நல காப்பகத்தில் ஒப்படைத்துள்ளோம். விளம்பரமும் கொடுத்துள்ளோம். உரிமை கோரி யாரும் வரவில்லை எனில், நானே பூன்ராட்டை தத்தெடுத்துக் கொள்வேன். என்னைத் தேடி வந்த நண்பன் அது. நாய்
 

Vitisak Payalaw முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த புகைப்படங்கள் செம வைரல். 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க