நோட்ரே டேம் தேவாலயத்தை மறுகட்டமைப்பு செய்ய சர்வதேச ஆர்க்கிடெக்ட் போட்டி! | France announces architecture competition

வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (17/04/2019)

கடைசி தொடர்பு:20:30 (17/04/2019)

நோட்ரே டேம் தேவாலயத்தை மறுகட்டமைப்பு செய்ய சர்வதேச ஆர்க்கிடெக்ட் போட்டி!

பாரீஸ் நகரின் பழம்பெரும் அடையாளமாகத் திகழ்ந்த புகழ்பெற்ற நோட்ரே டேம் தேவாலயம் தீக்கிரையானதில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை கண்கலங்க வைத்தது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பர்யச் சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட இந்த தேவாலயம் 850 வருட பாரம்பர்யம் மிக்கது. பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தேவாலயத்தை மறுகட்டமைப்பு செய்ய பிரான்ஸ் நாட்டு தொழிலதிபர்களும் மக்களும் பண உதவி செய்ய வேண்டுமென உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். வேண்டுகோள் விடுத்த இரண்டே நாள்களில் 1 பில்லியன் யூரோ பணம் நிதியுதவியாகக் குவிந்தது.

தேவாலயம்

இதையடுத்து, தீக்கிரையான நோட்ரே டேம் தேவாலயத்தை மீண்டும் நன்முறையில் எடுத்துக்கட்டுவதற்காக பிரான்ஸ் பிரதமர் பிலிப், சர்வதேச அளவிலான ஆர்க்கிடெக்ட் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மறுகட்டமைப்பு செய்யப்படும் தேவாலயம், முன்பைவிட கூடுதல் அழகோடிருக்க வேண்டும் என்றார். மேலும், இது தனக்கு பெரிய சவாலான செயலென்றும் வரலாற்று முக்கியத்துவமான பொறுப்பு என்றும் கூறினார். 

தேவாலயம்

தேவாலயத்தை எவ்வளவு பணச்செலவில் கட்டிமுடிப்பது என்று வரையறை செய்யப்படவில்லை. ஐந்தாண்டு காலத்திற்குள் கட்டிமுடிக்க வேண்டுமென்று காலக்கெடு மட்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.