உலகின் செல்வாக்கு மிக்க 100 பேரில் இடம் பிடித்த இரு இந்தியப் பெண்கள்! - 'டைம்' இதழ் கௌரவம் | The Time 100 Most Influential People 2019 list was released

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (18/04/2019)

கடைசி தொடர்பு:16:30 (18/04/2019)

உலகின் செல்வாக்கு மிக்க 100 பேரில் இடம் பிடித்த இரு இந்தியப் பெண்கள்! - 'டைம்' இதழ் கௌரவம்

பிரபல டைம் இதழ் வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில், இந்தியத் தொழிலதிபர் அம்பானி, வழக்கறிஞர் அருந்ததி கட்ஜு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

அம்பானி - அருந்ததி கட்ஜு

நியூயார்க்கில் இருந்து வெளிவரும் 'டைம்' இதழ், ஆண்டுதோறும் அரசியல், கலை, சமூகம் உள்ளிட்ட துறைகளில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலை வெளியிட்டுவருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்தியா சார்பில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான அருந்ததி கட்ஜு, மேனகா குருசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

குறிப்பாக, இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஸ்வீடனைச் சேர்ந்த காலநிலை ஆர்வலர் சிறுமி கிரேட்டா தன்பெர்க், ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்ஜமின், போப் பிரான்சிஸ், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சீன அதிபர் ஸி ஜின்பிங், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்  சக்கர் பெர்க், அமெரிக்க கோல்ஃப் வீரர் டைகர் வுட், அமெரிக்க கால்பந்தாட்ட வீராங்கனை அலெக்ஸ் மோர்கன், அமெரிக்க நடிகர் மார்ஸெல்லா அலி மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நகைச்சுவை நடிகர் ஹசன் மின்ஹாஜ் போன்றவர்களும் இடம்பெற்றுள்ளனர். 

இதில், இந்திய அளவில் அதிக கவனம் ஈர்த்தவர்கள் சமூக ஆர்வலர்கள் அருந்ததி கட்ஜு மற்றும் மேனகா குருசாமி. இவர்கள் குறித்து பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அறிமுகக் கட்டுரை எழுதியுள்ளார். அதில், ஓரினச் சேர்க்கை பிரிவைத் தண்டனைக்குரிய குற்றமாக்கும் இந்திய சட்டப் பிரிவை நீக்கக் கோரும் பல்வேறு மனுக்கள்மீது நடைபெற்ற வழக்கில், இந்த இருவரும் மனுதாரர்களுக்கு ஆதரவாக வாதாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியதில், இவர்கள் இருவரின் பங்கும் முக்கியமானது.