6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்! | Multiple explosions in two churches of Colombo

வெளியிடப்பட்ட நேரம்: 10:52 (21/04/2019)

கடைசி தொடர்பு:22:23 (21/04/2019)

6 இடங்களில் குண்டுவெடிப்பு - ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் நடந்த சோகம்!

கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை அந்தோணியர் தேவாலயம், நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

இலங்கை

ஏசு உயிர்தெழுந்த தினத்தை கிறித்துவ மக்கள் ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். இந்த பண்டிகை உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து கிறிஸ்துவ மக்களாலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைக்காக மக்கள் அதிக அளவில் கூடியுள்ளனர். இந்நிலையில் இந்திய நேரப்படி காலை 8:45 மணிக்கு கொழும்புவில் உள்ள புனித அந்தோணியர் ஆலயம் மற்றும் நீர்கொழும்புவில் உள்ள புனித செபஸ்டியன் தேவாலயம் ஆகியவற்றில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது யாரும் எதிர்பாராத வகையில் தேவாலயத்தினுள் மக்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது.

இது மட்டுமில்லாது இலங்கையில் உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட ஆறு இடங்களில் குண்டு வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 80 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகஅந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குண்டு வெடிப்பு சேதம், உயிரிழப்பு,  இதற்கு யார் காரணம் போன்ற எந்த தகவல்களும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.