`கோழைத்தனமான பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டுவர வேண்டும்!' - சங்கக்காரா வேதனை | kumar sangakkara Condemned Sri lanka blast

வெளியிடப்பட்ட நேரம்: 17:12 (21/04/2019)

கடைசி தொடர்பு:17:14 (21/04/2019)

`கோழைத்தனமான பயங்கரவாதிகளை நீதிக்கு முன் கொண்டுவர வேண்டும்!' - சங்கக்காரா வேதனை

இலங்கையின் கொழும்பு மாநகரில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தேவாலயங்களில் திரண்டிருந்தனர். வழக்கமாக ஈஸ்டர் திருநாள் இலங்கையில் சிறப்பாக கொண்டாடப்படும். இதனால் இந்த ஆண்டும் அதற்கான சந்தோஷத்துடன் மக்கள் குவிய தொடங்கினர்.

இலங்கை

இந்த நேரத்தில் கொழும்புவில் உள்ள அந்தோணியர் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. தொடர்ந்து நீர்கொழும்பு, மட்டகளப்பில் உள்ள தேவாலயங்களிலும் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ இலங்கை மக்கள் அமைதியைத் தொலைத்து உள்ளனர். இப்போது வரை ஒன்பது இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10 வருடங்களுக்குப் பிறகு நடந்த இந்த தாக்குதல் குறித்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா கண்டனம் தெரிவித்துள்ளார். 

சங்கக்காரா

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``காட்டுமிராண்டித்தனமான இந்த இழிந்த செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக மக்கள் உயிரிழந்துள்ளனர். எங்கள் நாட்டிற்கு வந்த விருந்தினர்கள் இறந்துவிட்டனர். குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும் போது என் இதயம் நொறுங்கியது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு வேகமாக மீட்பு உதவிகள் கிடைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் கைகோக்க வேண்டிய நேரமிது. நாம் படுகின்ற இந்த துயரத்துக்கு வருத்தப்படுவதுக்குப் பிறகு நேரம் ஒதுக்கிவிட்டு தற்போது பாதிக்கப்பட்ட மக்களை வேதனையில் இருந்து முதலில் மீட்டெடுக்க வேண்டும். தீர்ப்பு அல்லது முடிவுகளுக்கு விரைந்து செல்லாதீர்கள்.

சதி கோட்பாடுகளை விலைக்கு வாங்க வேண்டாம். இந்த துயரத்தை அரசியல்ரீதியாக கொண்டு செல்ல நினைப்பது அவமானத்துக்குரியது. அதிகாரிகள் இந்த கோழைத்தனமான பயங்கரவாதிகளை நீதிக்குக் கொண்டு வரட்டும். நம்மைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவர்களை நேசிப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும்  கவனத்தில் கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருங்கள். இத்தகைய சோகம் மீண்டும் ஏற்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க