`பெரும்பாலானவை தற்கொலைப்படைத் தாக்குதல்களே' - இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது! | 7 suspects arrested in connection with bomb blast in Colombo

வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (21/04/2019)

கடைசி தொடர்பு:17:37 (21/04/2019)

`பெரும்பாலானவை தற்கொலைப்படைத் தாக்குதல்களே' - இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது!

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை குண்டுவெடிப்பு

இலங்கை தலைநகரான கொழும்புவில் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது நகரின் முக்கிய தேவாலயங்களில் மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. முக்கிய தேவாலயங்கள், ஹோட்டல்களில் நடந்த இந்த வெடிகுண்டு தாக்குதல்களால் மக்கள் நிலை குலைந்து போயியுள்ளனர். இதுவரை 9 இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளது. 35 வெளிநாட்டவர் உட்பட 185 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கை

400க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் எனக் கூறப்படுகிறது. தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்குதல்களுக்கு யார் காரணம் என்ற விசாரணை தொடங்கியுள்ள நிலையில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ரூவன் விஜயவர்த்தனா

தாக்குதல் தொடர்பாக பேசியுள்ள அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ரூவன் விஜயவர்த்தனா, ``இந்த குண்டுவெடிப்பில் பெரும்பாலானவை தற்கொலைப்படை தாக்குதல்கள் தான். மொத்த குண்டுவெடிப்பையும் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் தான் செய்துள்ளனர். இதுவரைக்கும் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். முதல்கட்டமாக இந்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" எனக் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க