`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு | Some intelligence officers were aware of this incidence says srilankan Telecommunication minister

வெளியிடப்பட்ட நேரம்: 07:15 (22/04/2019)

கடைசி தொடர்பு:07:15 (22/04/2019)

`சர்ச்சுக்குப் போக வேண்டாம் என என் தந்தை ஏற்கெனவே கூறினார்' - சர்ச்சையைக் கிளப்பிய இலங்கை அமைச்சரின் பேச்சு

இலங்கையில், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 228 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 470-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் 3-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இலங்கையில் நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். தாக்குதல் தொடர்பாக எட்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் தொலைத்தொடர்புத் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் ஃபெர்னாண்டோ தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை

தாக்குதல் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``சில உளவு அமைப்புகள் இந்தத் தாக்குதல் தொடர்பாக முன்னரே எச்சரிக்கை செய்திருந்தனர். ஆனால், தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை. உளவுத் துறையின் எச்சரிக்கை என் தந்தைக்கு நேற்று இரவே தெரிந்தது. ``சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் செல்கின்றன. சர்ச்சுக்குச் செல்ல வேண்டாம்" என அவர்  கேட்டுக்கொண்டார். உளவு அமைப்புகள் எச்சரிக்கை கொடுத்தும் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரியவில்லை.

இந்த விவகாரத்தில், உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கோரிக்கை விடுத்தார். இதேகருத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் பேசினார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``உளவுத்துறை எச்சரித்திருந்தது உண்மை தான். அப்படி இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வி ஏற்பட்டது என்பதுகுறித்து தனியாக விசாரிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே, ``குண்டுவெடிப்பு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இதில் 10 பேர் விசாரணைக்காக சிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் " என அந்நாட்டு போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் காரணமாகப் போடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு திரும்பப் பெறப்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க