டிகாப்ரியோ, கேட்டி பெர்ரி, ஜஸ்டின் பீபர்... ஒரே ஆல்பத்தில் 30 பிரபலங்கள் #Earth | All-star environmental music video goes viral

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (22/04/2019)

கடைசி தொடர்பு:16:30 (22/04/2019)

டிகாப்ரியோ, கேட்டி பெர்ரி, ஜஸ்டின் பீபர்... ஒரே ஆல்பத்தில் 30 பிரபலங்கள் #Earth

இன்று ஏப்ரல் 22 உலக பூமி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு `Earth' என்னும் ஆல்பம் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும், நமது பூமியின் சிறப்பை ஜாலியாக மக்களுக்கு எடுத்துச்செல்லும் நோக்கில் பிரபல ராப் பாடகரும், நகைச்சுவை நட்சத்திரமுமான லில் டிக்கி வெளியிட்டுள்ளார்.

Earth ஆல்பம் சாங்

இந்தப் பாடலின் உருவாக்கத்தில் ஜஸ்டின் பீபர், எட் ஸீரின், அரியானா கிராண்டே, கேட்டி பெர்ரி, PSY லியோனார்டோ டி காப்ரியோ என 30-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் பாடகர்கள் பங்குபெற்றுள்ளனர். 'Shape of You', 'Gangnam style', 'Thank you Next' என இவர்கள் தனித்தனியே வெளியிட்ட பாடல்களே கோடிகளில் ஹிட் அடித்தவை. வெள்ளியன்று வெளியான இந்த அனிமேட்டட் பாடலும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

பாடகர்கள்

இந்தப் பாடலில் வரும் லாபம் அனைத்தும் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி காப்ரியோவின் 'டி காப்ரியோ' அமைப்புடன் இயங்கும் அமைப்புகளுக்குச் சென்றுசேரும், அது காலநிலை மாற்றம் போன்ற பிரச்னைகளுக்கு எதிரான தீர்வுகளை முன்னெடுக்க செலவழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க