அழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்!- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர் | 3 children of Danish billionaire killed in Sri Lanka blasts

வெளியிடப்பட்ட நேரம்: 17:44 (22/04/2019)

கடைசி தொடர்பு:19:54 (24/04/2019)

அழகான நாடு என்று வந்தவர் 3 குழந்தைகளை இழந்தார்!- இலங்கையில் கதறும் டென்மார்க் முதல் பணக்காரர்

டென்மார்க் நாட்டின் தொழிலதிபர் ஆன்ட்ரஸன் ஹாவல்க் பாவ்ல்ஸ்ன் (வயது 46). இவருக்கு மனைவியும் நான்கு குழந்தைகளும் உண்டு. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இலங்கை நாட்டுக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தார். போர்ப்ஸ் பட்டியலின்படி, டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரர் இவர். 

இலங்கையில் 3 குழந்தைகளை பறிகொடுத்த டென்மார்க் தொழிதிபர்

பல்வேறு தொழில் நிறுவனங்கள் இவருக்கு உள்ளன. இவரின், சொத்து மதிப்பு ரூ.50,000 கோடி. இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் ஆன்ட்ரஸனின் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் பலியாகியுள்ளனர். இந்தத் தகவலை Povlsen's fashion நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். குடும்பத்தினர் தனிப்பட்ட சுதந்திரம் கருதி வேறு எந்தத் தகவலும் தெரிவிக்க முடியாது. அவர்களின் உணர்வுகளுக்கு  ஊடகங்கள் மரியாதை கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தைகளின் பெயர் விவரம் அளிக்கப்படவில்லை. இலங்கையில் நேற்று நடந்த தொடர்ச்சியான குண்டுவெடிப்பில் பலியானவர்களில் 32 வெளிநாட்டினரும் அடக்கம். இறந்த வெளிநாட்டினர் பலர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.  

குழந்தைகளைப் பலி கொடுத்த ஆன்ட்ரஸனுக்கு ஸ்காட்லாந்து நாட்டின் 1 சதவிகித நிலம் சொந்தமானது. இந்த நாட்டில் ஆன்ட்ரஸனுக்கும் இவரின் மனைவி ஆன்னே ஸ்டார்ம் பென்டசர்ஸனுக்கும் சொந்தமாக 200,000  ஏக்கர் நிலம் உள்ளது. பிரிட்டனில் அதிகளவில் நிலம் சொந்தமாக வைத்திருப்பவர்களில் இவருக்கு இரண்டாவது இடம். 12 பெரிய எஸ்டேட்களும் உள்ளன. 

இலங்கை குண்டுவெடிப்பு

பெண்கள் உடையான வேரோ மோடா, ஜேக் அண்டு ஜோன்ஸ் ஜீன்ஸ் போன்றவை ஆன்டர்ஸனுக்குச் சொந்தமான `பெஸ்ட் செல்லர்' நிறுவனத்தின் தயாரிப்புதான். ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான ஆஸோஸ், ஸாலான்டோ நிறுவனங்களிலும் ஆன்ட்ரஸனுக்கு குறிப்பிடத்தக்க ஷேர்கள் உள்ளன. `இலங்கை ஓர் அழகான நாடு. இந்த ஈஸ்டர் விடுமுறையை அங்கு கழிக்கலாம்' என்று தன் குழந்தைகளிடம் கூறி கொழும்புக்கு ஆன்ட்ரஸன் சுற்றுலா அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில் குழந்தைகளைப் பறிகொடுத்துவிட்டு கண்ணீர் மல்க நிற்கிறார். 

ஆன்ட்ரஸனுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை!

நீங்க எப்படி பீல் பண்றீங்க