`வாகனங்களில் பெயர், தொலைபேசி எண் பதிவிடணும்!'- இலங்கை அரசு திடீர் உத்தரவு | The name and phone number should be register to public vehicles, Lankan defence announced

வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (23/04/2019)

கடைசி தொடர்பு:14:39 (23/04/2019)

`வாகனங்களில் பெயர், தொலைபேசி எண் பதிவிடணும்!'- இலங்கை அரசு திடீர் உத்தரவு

இலங்கை குண்டு  வெடிப்பு

லங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பை அடுத்து, 'வாகனங்களில் பெயர் ,தொலைபேசி எண்ணைப் பதிவிட  வேண்டும்' என இலங்கை பாதுகாப்புத் துறை  உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையில் உள்ள தேவாலயங்கள்  மற்றும் நட்சத்திர  ஓட்டல்களில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில் 300-க்கு மேற்பட்டோர் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.  இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு, இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையில், அவசர அவசரமாக இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.

இது தொடர்பாக அங்குள்ள  பத்திரிகையாளர் நேசனைத் தொடர்புகொண்டு பேசியபோது, ``இந்தச் சம்பவம் குறித்த விவாதம் இருக்கும். இதற்கிடையில், மக்களின்  பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு இலங்கை அரசு அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளது. அனைத்துப் பகுதிகளும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒருபகுதியாக, வாகனங்களில் பெயர், தொலைபேசியைக் காட்சிப்படுத்தும் வகையில் பதிவிட வேண்டும் என இலங்கை பாதுகாப்புத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்தில், இதுவரை 55 பேரை காவல் துறை கைதுசெய்துள்ளது. அதில் ஏழு  பேர் பாகிஸ்தானியர்கள். மூன்று பேர் இந்தியர்கள், மேலும், தொடர்ந்து  தேடுதல் வேட்டை நடைபெற்றுவருகிறது"என்றார்.